பக்கம்:விசிறி வாழை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து நான்கு 48

“கால் டம்ளர் தண்ணிர் நஷ்டமாகியிருக்கும்” என்று சொல்லிச் சிரித்தாள் பாரதி,

சர்வரைப் பார்த்து, உனக்குப் பிடித்தமானதைக் கொண்டுவாப்பா!’ என்றான் ராஜா.

‘எனக்கு இந்த ஒட்டலில் போடுவது எதுவுமே பிடிக் தாது ஸார்!’ என்றான் சர்வர்.

‘சரி; அப்படியானுல் இரண்டு கப் காப்பி மட்டும் கொண்டு வா, போதும் என்றாள் பாரதி.

காப்பி வருகிறவரை பாரதியின் ஜாக்ரபி புத்தகத்தை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தான் ராஜா.

காப்பி வந்ததும் அதை அருந்தியபடியே அவன் வானத்தைப் பார்த்தபோது, வானமெங்கும் கருமேகங்கள் கவிந்து கொண்டிருந்தன.

‘இறுக்கமாக இருக்கிறது. மழை வந்தாலும் வரலாம்’’ என்றாள் பாரதி. -

வேந்தாலும் என்ன? வந்து கொண்டே இருக்கிறது’’ என்றான் ராஜா.

அவன் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே படபடவென்று மழைத்துளிகள் மேஜை விரிப்பின்மீது சிதறின. இருவரும் அவசரம் அவசரமாகப் புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு தெருவுக்கு விரைந்து போய் ஒரு டாக்ஸியைப் பிடித்துக் கொண்டனர். - - -

தான் மட்டும் தனியாகப் பஸ்ஸில் போய்விடலாம் என்றுதான் பாரதி முதலில் திட்டமிட்டிருந்தாள். மழையும் ராஜாவும் சேர்ந்து சதிசெய்ததுபோல் அவள் எண்ணத் தையே மாற்றி விட்டார்கள்.

டாக்ளி பாரதியின் வீட்டு வாசலில் போய் நின்றபோது மழை சோவெனக் கொட்டிக் கொண்டிருந்தது. நல்ல வேளே யாக அவள் ராஜாவுடன் வந்து இறங்கியதை ஒருவரும் கவனிக்கவில்லே. - , 4

அப்போது மணி ஏழு ஆகிவிடவே, நன்கு இருட்டிப் போயிற்று. டாக்ஸியிலிருந்து இறங்கிய பாரதி பங்களாவுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/47&oldid=689545" இலிருந்து மீள்விக்கப்பட்டது