பக்கம்:விசிறி வாழை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து நான்கு 45

கணக்கில் வீக் என்றால் என்னிடம் சொல்லுவதற் கென்ன? உடனே டியூஷன் வைப்பதற்கு ஏற்பாடு செய்திருப் பேன் அல்லவா? சரி; இனிமேல் இம்மாதிரி நேரம் கழித்து வீட்டுக்கு வரக்கூடாது, தெரிந்ததா? இதற்கு முன்னல்கூட இரண்டு நாள் நீ நேரம் கழித்து வந்திருக்கிறாய்’ என்றார்,

தோன் இரண்டு நாட்கள் லேட்டாக வந்தது அப்பா வுக்கு எப்படித் தெரிந்தது? இவ்வளவு கணக்காகத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிருரே! பாரதி சிந்தித்தாள்.

சரி; நீ போகலாம்’ என்று கூறி அனுப்பினர் சேதுபதி.

மறுநாள் கால், சேதுபதி தம்முடைய அறையில் உட் கார்ந்து பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்தபோது, டெலிபோன் மணி அடிக்கவே அவர் பாரதியை அழைத்து, டெலிபோனில் கூப்பிடுவது யாரென்று பார்’ என்றார்,

பாரதி டெலிபோன் ரிஸிவரைக் கையில் எடுத்துக் கேட்டபோது, பிரின்ஸிபால் பார்வதி பேசுகிறேன்’ என்று பதில் வந்தது.

தன் குட்டு வெளிப்பட்டு விட்டதோ என்று பாரதி நடுங்கிப் போனுள்.

‘அப்பா வீட்டில் இருக்கிருரா?? பார்வதி கேட்டாள்.

‘கொஞ்சம் வேலையாக இருக்கிறார். உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று அடக்கமாகக் கேட்டாள் பாரதி.

“நான் இப்போது வந்தால் அவரைச் சந்திக்க முடியுமா என்று கேட்டுச் சொல்.’’ -

கொஞ்சம் இருங்கள் மேடம் இதோ கேட்டுச் சொல் கிறேன்.”

பாரதி தன் தந்தையிடம் ஓடிப்போய், “அப்பா, பிரின்ஸி பால் உங்களைச் சந்திக்க வேண்டுமாம். இப்போது வரலாமா என்று கேட்கிறர். நீங்கள் கொஞ்சம் வேலையாக இருப்ப தாகச் சொன்னேன்.:

ஆமாம்; இப்போது எனக்கு நேரமில்ல, அப்புறம் பார்க்கலாம் என்று அப்பா பதில் கூறிவிடுவார் என்று அவள் எதிர்பார்த்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/49&oldid=689547" இலிருந்து மீள்விக்கப்பட்டது