பக்கம்:விசிறி வாழை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 விசிறி வாழை

தம்முடைய மகள்மீது அவர் கொண்டுள்ள கோபத் தைத் தணிக்க எண்ணிய பார்வதி தமாஷாகச் சிரித்துக் கொண்டே, இல்லையே, பாரதி கூறியது பொய்யில்லையே?’ என்றாள்.

பொய்யில்லையா? அவள் சினிமாவுக்குப் போயிருப் பாள் என்று தாங்களே சற்றுமுன் கூறினர்களே!’

ஆமாம்; அவள் கணக்கிலே வீக் என்று கூறியது பொய்யில்லே என்றுதான் சொல்ல வந்தேன்.’’ சிரித்த படியே கூறினுள் பார்வதி.

தம் மகளிடம் பார்வதி எடுத்துக் கொண்டுள்ள அக் கறையைச் சேதுபதியால் புரிந்து கொள்ள முடிந்தது. எவ்வளவு நாசூக்காகச் சிரித்துக் கொண்டே விஷயத்தைக் கூறிவிட்டாள் என்று தனக்குள்ளாகவே வி ய ந் து கொண்டார்.

‘அப்படியானல் அவளுக்கு யாராவது ஒரு புரொபஸ் ரைக் கொண்டு டியூஷன் சொல்லிக்கொடுக்க, ஏற்பாடு செய்ய முடியுமா?’’ சேதுபதி கேட்டார்.

யோராவது ஒரு புரொபஸர் என்ன? உங்களுக்கு ஆட் சேபனை இல்லையென்றால் நானே வந்து சொல்லித் தருகி றேன்’ என்றாள் பார்வதி.

‘பாரதி விஷயத்தில் இவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டு வந்ததுபற்றி மிக்க நன்றி. தங்களுக்குள்ள வேலை களுக் கிடையில் தாங்களே டியூஷனுக்கு வருவது......’ என்று இழுத்தார் சேதுபதி.

‘அதல்ை பரவாயில்லே; ஒழிவு நேரங்களில்தான் வரப் போகிறேன்.

சேதுபதிக்கு அந்தச் செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளித் தது. பார்வதியை இனி அடிக்கடி சந்திக்கலாம் என்பதை நினைக்கும்போது, அவர் உள்ளம் உற்சாகத்தில் மிதந்தது. அவளைச் சந்திப்பதில், அவளைக் காண்பதில், அவளுடன் பேசுவதில், அவளேப்பற்றியே எண்ணிக் கொண்டிருப்பதில் தனக்கு ஏன் இத்தனேக் குதுாகலம்? அதற்கு என்ன காரணம்? அவருக்கே அது விளங்கவில்லே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/52&oldid=689551" இலிருந்து மீள்விக்கப்பட்டது