பக்கம்:விசிறி வாழை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 விசிறி வாழை

யைச் சாய்த்துச் சாய்த்து, தன் மூக்கினல் கண்ணுடியைக் குத்திக் குத்தி, அதில் தெரிந்த தன் உருவத்தைப் பல கோணங்களில் ரசித்துக் கொண்டிருந்த குருவி ஒன்று பார் வதியைக் கண்டதும் சட்டெனப் பறந்து விட்டது.

பார்வதியால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. தலையில் தெரிந்த நரை தன்னைக் கண்டு பரிகசிப்பதுபோல் தோன் றவே, அந்த எண்ணம் அவள் உள்ளத்தை உறுத்தியது. அவள் சொல்லிக் கொண்டாள்: அப்படி ஒன்றும் எனக்கு வயதாகி விடவில்லை. இதோ என் கழுத்து, தாழங் குருத்து போல் எத்தனை அழகாயிருக்கிறது!’ என்று, பிடரியைத் தன் இரு கைகளாலும் தடவிப் பார்த்துக் கொண்டாள்.

புன்முறுவல் ஒன்றின் மூலமாகத் தன் மனக்குறையை ஜீரணித்துக் கொண்டவளாய் நாற்காலியில் போய் அமர்ந்து, மேஜைமீது கிடந்த புத்தகம் ஒன்றை எடுத்துப் புரட்டினுள்.

மைக்களுக்குத் தொண்டு புரியும் மகான்கள், சமூக சேவையில் ஈடுபட்ட தலைவர்கள், பள்ளிக்கூட ஆசிரியர்கள் ஆகியோர் ஸில்வர் ஒக் என்னும் மரங்களுக்கு ஒப்பானவர் கள். இந்த மரம் தனக்கென வாழ்வதில்லை. இதற்கெனத் தனிப்பட்ட ஆசாபாசங்களும் கிடையா. தேயிலைச் செடி கள் வளர்வதற்கு இவற்றின் லேசான இளம் நிழல் பயன் படுகிறது. இந்த மரங்களின் கிளைகள் அடர்ந்து படர்ந்து வளரும்போது நிழல் அதிகமாகிவிடும் என்பதற்காக அவற்றை வெட்டி விடுவார்கள். ஸில்வர் ஒக் மரத்தைப் போல், ஆசாபாசங்களை அவ்வப்போது வெட்டிக்கொண்டு வாழ்பவர்கள்தான் சமூக சேவையைச் சரிவரச் செய்ய முடியும்.’’ -

நானும் *ளில்வர் ஓக் மரத்தைப் போல் ஆசாபாசங் களை வெட்டிக் கொண்டு வாழவேண்டியவள் தாளு? எனக் கென்று தனி வாழ்க்கை கிடையாதா?

கீழே ராஜாவின் சீட்டிக் குரல்மணி ஒன்பதாகி விட்டது என்பதை அறிவித்தது. - . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/54&oldid=689553" இலிருந்து மீள்விக்கப்பட்டது