பக்கம்:விசிறி வாழை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து ஐந்து 51

‘இன்று திங்கட்கிழமை. சீக்கிரமே கல்லூரிக்குப் போய் அலுவல்களே முடித்துக் கொள்ள வேண்டும். இன்று மாலை கல்லூரி முடிந்ததும் பாரதியின் வீட்டுக்குச் சென்று கணக் குப் பாடத்தைத் தொடங்கிவிட வேண்டியதுதான்.”

சனிக்கிழமை மாலேயே போக வேண்டுமென்றுதான் முதலில் நினைத்தாள். ஆனலும் ஒப்புக்கொண்ட உடனேயே அவ்வளவு அவசரப்பட்டுக் கொண்டு போய்விடக் கூடாதென் பதற்காக, இரண்டு தினங்கள் தள்ளிப் போட்டாள். இந்த இரண்டு நாட்களாக எத்தனைக் கெத்தனே அமைதியோடு இருக்க வேண்டுமென்று எண்ணினளோ, அவ்வளவுக்கு அவள் உள்ளத்தில் ஒருவிதப் பரபரப்பு அலேந்து கொண் டிருந்தது.

ஞோனம்! சமையலாகி விட்டதா? சாப்பிட உட்கார லாமா?’ என்று கேட்டுக் கொண்டே மாடியிலிருந்து கீழே இறங்கி வந்துவிட்டாள் பார்வதி.

தினந்தோறும், மணே போட்டு, இலே போட்டு, ராஜா வந்து உட்கார்ந்துகொண்டு அத்தை அத்தை’ என்று அலறிய பிறகே கீழே இறங்கி வருவதுதான் பார்வதியின் வழக்கம். வழக்கத்துக்கு மாருக ராஜாவுக்கு முன்னல் வந்து விட்ட பார்வதி, “ராஜா, சாப்பிட வரவில்லையா? ஏன் லேட் இன்றைக்கு உனக்கு?’ என்று கேட்டது, ஞானத்துக்குப் பெரும் வியப்பாயிருந்தது. -

“நான் லேட் இல்லே அத்தை; நீங்கதான் எர்லி’ என்று சிரித்துக் கொண்டே வந்து உட்கார்ந்தான் ராஜா.

‘நான் எர்லியா? நாற்பத்தாறு வயது என்பது எர் லியா?” தனக்குள்ளாகவே எழுந்த கேள்விக்கு விடை தேடிக் கொண்டிருந்தது அவள் உள்ளம்.

  • அத்தை பால்காரச் சின்னயனுக்குக் கல்யாணமாம். அடுத்த மாதம் முகூர்த்தம் வைத்திருக்கிரும்ை. இரு நூறு ரூபாய் முன் பணம் வேண்டுமென்கிறன்!” என்றான் ராஜா. *அவனுக்கு இதுவரை கலியாணமே ஆகவில்லையா? வயசு ஐம்பதுக்குமேல் இருக்கும் போலிருக்கிறதே!’
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/55&oldid=689554" இலிருந்து மீள்விக்கப்பட்டது