பக்கம்:விசிறி வாழை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து ஐந்து 58

பார்வதி, பகவான் பரமஹம்சரையும் தேவியையும் வணங்கி விட்டுக் காரை எடுத்தாள். அவள் உள்ளத்தில் பெரும் கொந் தளிப்பு ஏற்பட்டிருந்தது. அதை வெளியே காட்டிக்கொள் ளாமல் அமைதியாக இருக்க முயன்றபோதிலும் அவளால் முடியவில்லை. -

கார், வாசலைத் தாண்டியபோது செவிட்டுப் பெருமாள் வழக்கம்போல எழுந்து நின்று வணக்கம் செலுத்தின்ை. ஆனல் அவன் ஏதோ மாதிரியாகத் தன்னக் கவனிப்பது போல் பட்டது அவளுக்கு.

கார் கல்லூரி காம்பவுண்ட் வாசல் திருப்பத்தை அடைந்தபோது மணி பத்தடிக்க ஐந்து நிமிஷம் அதோ, கால விந்தி விந்தி நடந்து வரும் அகாதாவும் வந்துவிட் டாளே!

ஹல்லோ, குட் மார்னிங்’’ என்று புன்சிரிப்போடு கூறி ஞள் அந்தப் பிரெஞ்சு மாது. அகாதாவின் புன்சிரிப்பில் ஏதோ அர்த்தம் இருப்பதுபோல் தோன்றியது பார்வதிக்கு. கல்லூரி போர்டிகோவில் கொண்டு போய்க் காரை நிறுத் தியதும், அட்டெண்டர் ரங்கசாமி கார்க் கதவைத் திறக்க ஓடிவந்தான். அவன்கூடத் தன்னை ஏதோ மாதிரியாகப் பார்ப்பதுபோல் தோன்றியது அவளுக்கு.

தினந்தோறும் தன் அறைக்குள் சென்று நாற்காலியில் உட்கார்ந்ததும் மள மளவென்று அலுவல்களே முடிக்கும் பார்வதிக்கு, அன்று ஏனே எந்த வேலேயுமே ஓடவில்லை. எதுவும் முக்கியமாகவும் படவில்லை. சாயந்திரம் எப்போது மணி ஐந்தடிக்கப் போகிறது; கல்லூரி முடியப் போகிறது; சேதுபதியின் வீட்டுக்குப் போகலாம்? என்பதையே எண்ணிக் கொண்டிருந்தாள் அவள்.

இதுவரை நேரம்போதவில்லையே என்பதுதான் பார்வதி யின் குறை. இன்று நேரம் போகவில்லையே என்பது அவள் குறையாக இருந்தது! -

கெடியரத்தின் முள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/57&oldid=689556" இலிருந்து மீள்விக்கப்பட்டது