பக்கம்:விசிறி வாழை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து ஐந்து 55

போன்ற பட்டுத் துகிலில் அந்தக் கீறலப் போட்டவர் வேறு யாருமல்ல; திருவாளர் சேதுபதி அவர்கள்தான்.

மணி ஐந்தடித்ததுதான் தாமதம். கல்லூரி மாணவி கள் அனைவரும் பட்டாம் பூச்சிகளைப்போல் தெரு வாயிலே நோக்கிப் பறந்து கொண்டிருந்தார்கள்.

பாரதி மட்டும் உற்சாகமின்றிப் பிரின்ஸிபால் பார்வதி யின் அறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்.

காரணம், கல்லூரி முடிந்ததும், தன்னுடைய அறைக்கு வந்துவிட வேண்டும் என்பது பார்வதியின் கட்டளை.

பாரதியைக் கண்டதுமே, என்ன புறப்படலாமா??? என்று கேட்டாள் பிரின்ஸிபால்.

கணக்கில் வீக்: கல்லூரி ஹாஸ்டல் தோழியுடன் படித்துக் கொண்டிருந்தேன்’ என்று தந்தையிடம் கூறிய ஒரு சின்ன பொய், இவ்வளவு விபரீதத்தில் கொண்டுவிடும் என்று பாரதி கனவிலும் கருதவில்லை.

போலீஸ் காவலுடன் சிறைக் கூடத்துக்குச் செல்லும் கைதியைப் போல், மெளனமாகக் காரில் ஏறி உட்கார்ந்து கொண்டாள் பாரதி. அடுத்த சில நிமிடங்களுக்குள்ளாகவே அந்தக் கார் சேதுபதி அவர்களின் பங்களாவில் போய் நின்றது.

காரை விட்டுக் கீழே இறங்கும்போதே அவ்விருவர் கண்களும் அவர் இருக்கிருரா என்று அறிந்துகொள்ளும் ஆவலில் சேதுபதியின் அறையைத் துழாவின. இருவருடைய ஆவலும் இரு வகையானவை. அவர் இருக்கமாட்டாரா?’ என்ற ஆவலில் பார்த்தாள் பார்வதி. அவர் இருக்கக் கூடாதே’ என்ற கவலேயுடன் நோக்கிள்ை பாரதி! வித்தி யாசம் அவ்வளவுதான்!

  • அப்பாவின் அறையில் உட்கார்ந்து கொள்ளுங்கள் மேடம். இதோ வந்து விடுகிறேன்...” என்று கூறிச் சென்றாள் பாரதி. .
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/59&oldid=689558" இலிருந்து மீள்விக்கப்பட்டது