பக்கம்:விசிறி வாழை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து ஒன்று

ராஜா!...”*

மாடியிலிருந்து ஒலித்தது அந்த அதிகாரக் குரல். கண் னியமும் கம்பீரமும் மிக்க அந்தக் குரலுக்குரியவரின் பெயர் பார்வதி; குரலினின்று பார்வதியின் உருவத்தை-நிறத்தை அழகை - வயதைக் கற்பனை செய்ய முயலுகிருேம். முடிய வில்லை.

இன்னும் சிறிது நேரத்தில், அந்தக் கன்னிப் பெண்இல்லை. வயதான மங்கை,-ஊஹ9ம், குமர்ரி பார்வதி, அதுவும் சரியில்லே-பின் எப்படித்தான் அழைப்பது? சாரதா மணிக் கல்லூரியின் தலைவி டாக்டர் குமாரி பார்வதி, அது. தான் சரி-இப்போது கீழே இறங்கி வரப்போகிருள். அப் போது நேரிலேயே பார்த்து விடலாம்.

மேஜை மீது வைக்கப்பட்டுள்ள காப்பி ஆறுவது கூடத் தெரியாமல் அந்தப் புத்தகத்திலுள்ள சில வரிகளில் மனத்தைச் செலுத்தி அவற்றையே திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருந்தாள் பார்வதி. அவளே அவ்வளவு தூரம் கவர்ந்து விட்ட அந்தப் புத்தகம் வேறென்றுமில்லை. பிேல்க்ரிம்ஸ் ப்ராக்ரஸ் என்னும் நூல்தான்.

பார்வதி தற்செயலாகத் தலை நிமிர்ந்தபோது எதிரில் ஆறிக் கொண்டிருக்கும் காப்பியைக் கவனித்தாள். சர்ப் வதற்குப் பக்குவமாக இருந்த சூடு இப்போது அதில் இல்லை. ஆறிப் போயிருந்தது. ஆயினும் அவள் அதைப் பொருட் படுத்தாமல் எடுத்துக் குடித்தாள். அவள் பார்வை பல கணியின் வழியாக ஊடுருவிச் சென்று சற்றுத் தூரத்தில் தெரிந்த சாரதாமணிக் கல்லூரியின் புதிய ஹாஸ்டல் கட்டடத்தில் பதிந்தது. அந்த வெண்மையான தூய திறக் கட்டடத்தைக் கண்டபோது அவள் உள்ளமும் உடலும் சிலிர்த்தன. எண்ணம் ஆறு மாதங்களுக்குப் பின் நோக்கிச், சென்று, அப்போது நிகழ்ந்த ஒரு காட்சியைச் சலனப் படி மாக்கி, மனத் திரைக்குக் கொண்டு வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/6&oldid=689559" இலிருந்து மீள்விக்கப்பட்டது