பக்கம்:விசிறி வாழை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 விசிறி வாழை

தனிமையில் அந்த அறைக்குள் காலடி எடுத்து வைத்த போது, ஒரு கோயிலின் கர்ப்பக் கிரகத்துக்குள் செல்வது போல் அச்சம் ஏற்பட்டது பார்வதிக்கு.

அறைக்குள்ளிருந்த திருவாளர் சேதுபதி அவர்களுடைய மனேவியின் திருவுருவப் படம், அமைதி நிறைந்த அந்த அழகு வடிவம், பார்வதியைப் பார்த்துக் கேட்டது: ‘என்னுடைய கணவரின் அன்புக்குப் பாத்திரமாகப் பார்க் கிருயா, அம்மா?

உருவம் பேசவில்லே. அப்படி ஒரு பிரமை பார்வதிக்கு. சட்டென அவ்வறையை விட்டு வெளியேறிய பார்வதியின் முகத்தில் வியர்வைத் துளிகள் முத்து முத்தாக அரும்பி யிருந்தன.

‘ஏன் மேடம், உங்களுக்கு இப்படி வியர்த்து விட்டது. விசிறியின் ஸ்விட்சைப் போடட்டுமா என்று கேட்டுக் கொண்டே வந்தாள் பாரதி.

“நாம் இருவரும் இங்கேயே இந்த ஹாலிலேயே உட் கார்ந்து கொள்ளலாம்’ என்றாள் பார்வதி.

கணக்குப் பாடம் ஆரம்பமாயிற்று. முதல் நாள் என்ப தால் மிகவும் சுலபமான கணக்குகளையே கொடுத்துப் போடச் சொன்னுள் பார்வதி. அரைமணி நேரம் கழிந்தது.

சேரி, இன்று இத்துடன் நிறுத்திக்கொள்ளலாம்...” என்று கூறிய பார்வதி, அமைதியின்றி அங்குமிங்கும் பார்த் துக் கொண்டே இருந்தாள். அந்தரங்கமாக ஓர் ஆசை,அவர் ஒரு வேளே வந்தாலும் வரலாமென்று. அதே சமயம் வாச லில் கார் வரும் ஓசை கேட்டது. ஆமாம்; அதிலிருந்து சேதுபதிதான் இறங்கி வந்தார்.

அவரை எப்படியும் சந்திக்கலாம் என்று பார்வதியின் உள்மனம் சொல்லிக்கொண்டிருந்தது வீண் போகவில்லை. பார்வதி புறப்படுவதற்குத் தயாராக எழுந்து நின்றுகொண் டிருப்பதைக்கண்ட சேதுபதி, உட்காருங்கள் போகலாம். வந்து வெகு நேரமாயிற்றா? பாரதி, எங்கள் இருவருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/60&oldid=689560" இலிருந்து மீள்விக்கப்பட்டது