பக்கம்:விசிறி வாழை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து ஐந்து 57.

காப்பி கொண்டுவா...” என்று கூறியபடியே சோபாவில் சாய்ந்தவர் ‘ம்...பாரதி கணக்கில் எப்படி இருக்கிருள்!?? என்று கேட்டார்.

பேரவாயில்லை. நான் வந்து அரை மணி நேரம்தான் ஆயிற்று. முதல் நாளே எல்லாக் கணக்குகளையும் கொடுத்து அவன்த் தொந்தரவு படுத்த விரும்பவில்லை. எடுத்த எடுப்பி லேயே மூளையைக் குழப்பிவிடக் கூடாதல்லவா? பொது வாகவே குழந்தைகள், தினம் மூன்று மணிநேரம் படித்தால் போதும் என்பதுதான் என் அபிப்பிராயம். ஆடு மாடுகள் புல்லை மேய்கின்றன. மேலோடு மேய்கின்றன. புல் திரும் பவும் செழிப்பாக வளர்கிறது. வேர் வரையில் தின்று விட் டால் என்னவாகும்? புல்லே அழிந்துவிடும் அல்லவா? அதே மாதிரிதான் குழந்தைகளையும் வருத்தக் கூடாது?’ என்றாள்.

பேஷ்! என்னுடைய கருத்தும் இதேதான். ஏறக் குறைய நம் இருவருடைய எண்ணங்களும் ஒன்றாகவே இருக் கும் போலிருக்கிறது” என்று சிரித்துக்கொண்டே கூறிஞர் சேதுபதி.

‘நம்முடைய சிறு வயதில் கொண்டிருந்த அபிப்பிராயங் களுக்கும் இப்போதுள்ளவற்றுக்கும் எவ்வளவோ வித்தி யாசம். முன்பெல்லாம் மாணவிகள் ஓயாமல் படித்துக் கொண்டிருக்க வேண்டுமென்ற கருத்துடையவளா யிருந் தேன். இப்போது முற்றிலும் மாருக எண்ணுகிறேன். வயது ஆக ஆக, அனுபவம் முதிர்ச்சி அடைய அடைய, நம்முடைய கருத்துகளும் மாறிக்கொண்டே போகின்றன...’ என்றாள் பார்வதி, .

  • அதுதான் இயற்கை, அறிவின் வளர்ச்சிக்கு அடை யாளம், மாவடுவாக இருக்கும்போது துவர்க்கிறது. அதுவே காயாகும்போது புளிக்கிறது. பின்னர் பழமாகும்போது இனிக்கிறது. ஆகவே, இவை மூன்றும் வெவ்வேறு பழ வகை கள் என்று கூறுவது சரியில்லை யல்லவா?”

சேதுபதி இந்த உவமையைக் கூறியதும் பார்வதி, மிகப் பொருத்தமான உதாரணத்தின்மூலம் நான் கூற வந்ததைத் தெளிவாக்கி விட்டீர்கள்!’ என்று கூறி விய ந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/61&oldid=689561" இலிருந்து மீள்விக்கப்பட்டது