பக்கம்:விசிறி வாழை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 விசிறி வாழை

அவளால் அதற்குமேல் பேச முடியவில்லை. ஏதேதோ பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த தெல்லாம், அந்த உவமையைக் கேட்ட வியப்பில் அடிப்பட்டுப் போய் விட்டன. அவரை நேரில் காணும்போது பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த தெல்லாம், இப்போது பேசத் தகுதியற்ற விஷயங்களாகிவிட்ட்ன. அவர் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருக்கிறார்!

பாரதி காப்பி கொண்டு வந்து வைத்தாள். காப்பியை அருந்தியபடியே ‘தாங்கள் தினமும் இங்கு வரப்போவ தாகச் சொன்னிர்கள் அல்லவா?’ என்று கேட்டார் சேதுபதி.

ஆமாம்” என்றாள் பார்வதி. ‘அவசியம் வந்து போய்க் கொண்டிருங்கள். நேரம் கிடைக்கும் நாட்களில் நானும் வந்துவிடுகிறேன். பொது வாகச் சில விஷயங்களைப்பற்றி இருவரும் பேசிக் கொண் டிருக்கலாம். உங்களிடம் பேசிக் கொண்டிருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது” என்றார் சேதுபதி.

பார்வதி தலையைக் குனிந்து கொண்டாள். அது அடக் கத்தின் அறிகுறியா? வெட்கத்தின் விளைவா?

வாசலில் ஸ்கூட்டர் வரும் ஓசை கேட்டது. ‘பாரதி, யார் என்று பார்த்துவிட்டு வா’ என்றார் சேதுபதி .

பாரதி வெளியே போய்ப் பார்த்தாள். ராஜா வந்து கொண்டிருந்தான். .

அவனைக் கண்டதும் பாரதியின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. ராஜா இப்போது எதற்காக இங்கே வருகிறார்? அவருடன் ஏதேதோ பேச வேண்டுமெனத் துடித் துக் கொண்டிருத்தாள், பாரதி. ஆல்ை அப்பாவும் பிரின்ஸி பாலும் இருக்கும்போது எப்படிப் பேசுவது? -

எேங்கே வந்தீர்கள் ராஜா?’’ அவளுக்கு ராஜா பதில் கூறிக் கொண்டிருக்கும்போதே, அப்பாவும் பிரின்ஸிபாலுமே வாசலுக்கு வந்து விட்டார்கள். *அத்தை எங்கள் கல்லூரி பிரின்ஸிபால் தங்களைச் சந்திக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/62&oldid=689562" இலிருந்து மீள்விக்கப்பட்டது