பக்கம்:விசிறி வாழை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து ஆறு 63

சௌபாக்கியவதி சரஸ்வதிக்கும், சிரஞ்சீவி சேதுபதிக் கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட மேற்படி திருமண சுபமுகூர்த்தம் இனிது நடந்தேறி இன்று முப்பது ஆண்டு களுக்குமேல் ஆகிவிட்டன. -

சேதுபதி!-அந்தப் பெயரை வாசித்தபோது அவள் நெஞ்சத்தில் ஓர் அதிர்ச்சி ஏற்பட்டது.

சரஸ்வதி!-சேதுபதியின் அறையில் மாட்டப்பட்டுள்ள அவருடைய மனைவியின் உருவப் படம் இந்தச் சரஸ்வதி யினுடையதுதானே? முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பழகிய தன்னுடைய கல்லூரித் தோழி சரஸ்வதியின் முகத்தை நினைவுக்குக்கொண்டு வந்து அந்த முகத்துடன் படத்திலுள்ள முகத்தை ஒத்திட்டுப் பார்க்க முயன்றாள். ஊஹூம்; முடிய வில்லே. பால்ய சிநேகிதி சரஸ்வதியின் முகம் அவளுக்கு மறந்தே போய்விட்டது!

படத்திலுள்ள சரஸ்வதிக்கு வயது முப்பது அல்லது முப்பத்தைந்துக்கு மேல் இருக்கலாம். கல்லூரித் தோழி சரஸ்வதியை அவள் பதினெட்டு வயது கன்னிப் பெண்ணு யிருந்தபோது கண்டதுதான். எனவே, அடியோடு மறந்து போன ஒரு முகத்தை, முப்பத்தைந்து வயதான ஒரு சுமங்கலி யின் முகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து, அந்தச் சரஸ்வதிதான இவள் என்பதை நிச்சயப்படுத்துவது அவளால் இயலாத காரியமாயிருந்தது.

எண்ணங்கள் சுழன்றன. ஏதேதோ குழப்பங்களும், ஆசைகளும், கவல்ேகளும் கற்பனைகளும் பார்வதியின் நெஞ் சத்தில் புகுந்து புயலாகப் பரிணமித்துச் சுழன்று கொண் டிருந்தன.

முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குமுன் ஒரு நாள், பார்வதிக்கு அப்போது பதினெட்டு வயது இருக்கலாம். இதே சாரதாமணிக் கல்லூரியில் இன்டர்மீடியட் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய தந்தை பலராம வாத்தியார் எலிமென்டரி பாடசாலையில் நீண்ட காலம் ‘எழுத்தறிவிக்கும் இறைவனாக இருந்து வயிற்றைக் கழுவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/67&oldid=689567" இலிருந்து மீள்விக்கப்பட்டது