பக்கம்:விசிறி வாழை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து ஆறு 65

‘எங்கேயோ பிறந்தேன். எங்கேயோ வளர்கிறேன். நான் ஓர் அநாதை. கன்னிப் பெண்; u prar5, என்னிடம் இன்ைெரு அநாதைக் குழந்தை! இந்தக் குழந் தைக்கும் எனக்கும் ஆதரவு சாம்பசிவம்.

‘நான் கன்னிப் பெண்ணுக இருந்து கொண்டே, குழந் தைக்குத் தாயாகவும் இருக்க வேண்டும். படித்துக் கொண்டே பணமும் சம்பாதிக்க வேண்டும். தெருவில் செல் லும் வாலிபர்களின் கண் பார்வையிலிருந்து தப்பி வாழ வேண்டும். படித்துக் கொண்டே, படித்தபடி பணம் சம் பாதித்துக் கொண்டே, அநாதையாக இருந்துகொண்டே, அநாதையை வளர்த்துக் கொண்டே, கன்னியாக இருந் து. கொண்டே, கலியாணம் ஆனவளைப் போல் வாழ்ந்து கொண்டே, தேவி... இதென்ன விசித்திர வாழ்க்கை! யாருக்காக நான் வாழ்கிறேன்? எதற்காக வாழ்கிறேன்??

‘அப்பா, நான் டியூஷனுக்குப் போகிறேன்’ என்று குழந்தையை எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு புறப்பட் டாள் பரர்வதி.

சாம்பசிவம் சிரித்தார். அந்தச் சிரிப்பிலே வேதனையும் வருத்தமும் கலந்திருந்தன.

போகிற இடங்களுக் கெல்லாம் இந்தக் குழந்தையை யும் கூடக் கூடத் தூக்கிக்கொண்டு போகிருயே, இதைத் தொட்டிலில் விட்டுச் சென்றால் நான் பார்த்துக் கொள்ள மாட்டேன? சாம்பசிவம் கேட்டார்.

‘தங்களுக்கு எதற்குச் சிரமம், அப்பா! கையோடு இந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டு போவது எனக்கு ஒரு விதத்தில் செளகரியமாகவே இருக்கிறது. தெருவில் செல் லும் வாலிபர்கள் என்னைப் பார்க்கும்போது ஒரு தாயைப் பார்ப்பதுபோல் மரியாதை காட்டுகிறர்கள். அவர்களுடைய பார்வை குற்றமில்லாமல் இருக்கிறது. ஆகையால், என் ராஜா என் கன்னிப் பருவத்துக்கு ஒரு கவசமாக இருந்து உதவுகிருன்...??

  • நீ ஒரு வேடிக்கையான பெண்!’’ என்றார் சாம்பசிவம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/69&oldid=689569" இலிருந்து மீள்விக்கப்பட்டது