பக்கம்:விசிறி வாழை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 விசிறி வாழை

ஆமாம், இராமலிங்க சுவாமிகள் சரித்திரம் நீங்கள் படித்ததில்லையா? அவர் முற்றும் துறந்த முனிவராகப் பற்றற்று வாழ்ந்த காலத்திலும் தன் இடுப்பில் ஒரு சாவிக் கொத்தைச் செருகி வைத்துக் கொண்டிருப்பாராம். வீடோ, வாசலோ, பெட்டியோ எதுவும் இல்லாமல் வெறும் சாவிக் கொத்தை மட்டும் வைத்துக் கொண்டிருந்ததற்கு என்ன காரணம் தெரியுமா? மற்றவர்கள் தன்னை உயர்வாக, முற்றும் துறந்த முனிவராக எண்ணிவிடக்கூடாது என்பதற் காகத்தான். என் கதையும் ஏறக்குறைய அப்படித்தான். கன்னிப்பெண் என்று என்னை யாரும் எண்ணி விடக்கூடாது என்பதற்காகவே எங்கே போனலும் இந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அல்கிறேன். என்னேப் பார்க்கிறவர்கள், என்னை ஒரு தாயாகப் பார்ப்பார்கள் அல்லவா?’ என்று கூறிச் சிரித்தாள்.

‘இனிமேல் உனக்கு இந்தக் கஷ்டமெல்லாம் இருக்காது. இன்று மாலே நான்கு மணிக்கு எனக்குத் தெரிந்தவர்கள் உன்னைப் பெண் பார்க்க வரப்போகிறார்கள். நான்தான் ஏற்பாடு செய்திருக்கிறேன். பெரிய பணக்கார இடம். பையன் பி. ஏ. படித்துக் கொண்டிருக்கிறன். ராஜா மாதிரி கண்ணுக்கு லட்சணமாக இருப்பான். நீ என் பேச்சைத் தட்ட மாட்டாய் என்ற நம்பிக்கையில் அவர்களே வரச் சொல்லி யிருக்கிறேன். கலியாணமே வேண்டாம் என்று சொல்லக்கூடாது. சொன்னல் இன்று முதல் நான் உன் னுடன் பேசவே மாட்டேன்...?? -

பலமான பீடிகையுடன் பார்வதி மறுத்துக்கூற முடியாத படி விஷயத்தைச் சொல்லி முடித்து விட்டார் சாம்பசிவம்,

அன்று மாலேயே சாம்பசிவத்துக்குத் தெரிந்த நண்பரும் அவருடைய மனைவியும் ஒரு வாலிபனுடன் பார்வதியைப் பார்க்க வந்திருந்தார்கள். r இேவன் என்னுடைய சகோதரியின் மகன் இவனுக்குத் தாயார் தகப்பனர் இல்லை. என் சொத்தெல்லாம் இவனுக் குத்தான் எழுதி வைக்கப் போகிறேன். பி. ஏ. படித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/70&oldid=689571" இலிருந்து மீள்விக்கப்பட்டது