பக்கம்:விசிறி வாழை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து ஆறு 67

கொண்டிருக்கிருன். பெயர் சேதுபதி...” என்றார் பிள்ளைக்கு

tfrif.

பலகாரங்களையும் தானே தயாரித்த காப்பியையும் கொண்டுவந்து அவர்கள் மூவருக்கும் கொடுத்துவிட்டு நமஸ் காரம் செய்தாள் பார்வதி,

‘இவள் என் வளர்ப்பு மகள். ரொம்பக் கெட்டிக்காரி; பெயர் பார்வதி.’’ என்று பெண்ணே அறிமுகப்படுத்தி வைத்தார் சாம்பசிவம்.

‘பெண் அடக்கமாக இருக்கிருள்’’ என்றர் பிள்ளைக்கு ff•

‘பிராப்தம் இருந்தால் நடந்துவிடுகிறது’’ என்றாள் பிள்ளைக்கு மாமி.

பிள்ளையும் பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அந்தரங்கமான மெளன. மொழியில் பேசிக் கொண்டார்கள். அந்த ஒரு விநாடியிலேயே ஒருவர்மீது ஒருவர் காதல்’ கொண்டார்கள் என்றுகூடக் கூறலாம்.

கோப்பி முதல் தரமாயிருக்கிறது’’ என்று பையன் நாசுக்காகத் தன் உள்ளத்தைச் சொல்லி விட்டான்.

பார்வதி உள்ளே போய் மறைவாக நின்று கொண்டு அந்த வாலிபனுடைய அழகிய வடிவத்தை, கம்பீரத்தைப் பார்த்து ரசித்தாள். அவன் தனக்குப் புருஷனுக வாய்ப் பானு?’ என்று ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.

பிள்ளைக்கு மாமா, பார்வதி கொண்டுவந்து வைத்த கோதுமை அல்வாவை ருசித்தபடியே தம் மனைவியைப் பார்த்து, நீயும் அல்வா செய்கிருயே! இந்த அல்வாவைப் பார் எவ்வளவு ருசியாயிருக்கிறது!?? என்றார்,

‘ஏன், உங்கள் மனைவி செய்யும் அல்வா இவ்வளவு நன்றாக இருக்காதோ?’ என்று கேட்டார் சாம்சிவம்.

என் மனைவி செய்யும் அல்லாவைச் சாப்பிட்டால் அப்புறம் அபிப்பிராயமே கூறமுடியாது’’ என்றார் பிள்ளைக்கு மாமா கண் சிமிட்டியபடி -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/71&oldid=689572" இலிருந்து மீள்விக்கப்பட்டது