பக்கம்:விசிறி வாழை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 விசிறி வாழை

அதென்ன அப்படி?’ என்று வியந்தார் சாம்பசிவம். ‘அது அப்படித்தான். அந்த அல்வாவைச் சாப்பிட்ட தும் நாக்கும் அண்ணமும் ஒன்றாேடு ஒன்றாக ஒட்டிக் கொண்டு பேச முடியாமல் போய்விடும்.’’ என்றார் பிள்ளைக்கு மாமா, பார்வதி உட்பட எல்லோரும் சிரித்து விட்டார்கள்!

சேரி, நேரமாகிறது; நாங்கள் போய் இரண்டு நாட் களில் தகவல் சொல்லி அனுப்புகிருேம்.’’ என்று கூறிப் புறப்பட்டனர். அந்தப் பெரியவர்கள்.

அதுவாை தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை, அவர்கள் புறப்படும்போது வீல்’ என்று அழத் தொடங்கியது.

இேது யாருடைய குழந்தை?? வியப்புடன் கேட்டார் பிள்ளைக்கு மாமா.

  • இந்தப் பெண்ணுக்கு ஒர் அண்ணன் இருக்கிருன். அவனுடைய குழந்தை. அது ஒரு தனிக்கதை’ என்றார் சாம்சிவம்.

நாலேந்து நாட்கள் கழிந்தன. ஏனே தெரியவில்லை, இந்தச் சம்பந்தத்தில் எங்களுக்கு இஷ்டமில்லே என்று தகவல் அனுப்பி விட்டார்கள் அந்தப் பெரியவர்கள்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பார்வதியிடம் கலியாணம் என்ற பேச்சை எடுக்கவே பயந்து விட்டார் சாம்பசிவம். பார்வதியும் தன் திருமணத்தைப்பற்றி அன்றாேடு மறந்து விட்டாள். காலம் ஒடிக்கொண்டிருந்தது. திடீரென்று ஒரு நாள் சாம்பசிவமும் கண் மூடிவிட்டார். இதெல்லாம் நிகழ்ந்து இன்று முப்பது ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன. பார்வதி தன் கையிலிருந்த சரஸ்வதி-சேதுபதியின் திருமணக் கடிதத்தை இன்ைெரு முறை படித்துப் பார்த்து விட்டு, அன்று தனனேக் காணவந்த வாலிபன்தான் சேதுபதியா ? சரஸ்வதிதான் அவருடைய மனைவியா ? சேதுபதியின் வீட்டில் மாட்டப்பட்டுள்ள திருவுருவப் படம் என் தோழி சரஸ்வதியினுடையதுதான?’ என்று யோசித் தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/72&oldid=689573" இலிருந்து மீள்விக்கப்பட்டது