பக்கம்:விசிறி வாழை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 விசிறி வாழை

புரிந்து கொள்ளும் அறிவுக் கூர்மையும், வாய்ந்த பார்வதி யுடன் பேசிக் கொண்டிருப்பதில் சேதுபதிக்கு ஒரு வெறியே இருந்தது. ஒரு நாளைக்கு ஒரு முறை சந்திப்பதாலும் பேசுவ தாலும் தீர்ந்து போகிற வெறி அல்ல அது. தாகத்துக்கு உப்புத் தண்ணிர் குடிக்கிற மாதிரிதான். குடிக்கக் குடிக்க, மேலும் மேலும் தாகம் எடுத்துக் கொண்டே இருக்கு மல்லவா? தன்னுள் புகுந்து தன்னை ஆட்டி வைக்கும் அந்த மயக்கத்தைப்பற்றி அவரே ஆராய்ந்து பார்த்தார். அதன் இரகசியம், மர்மம், மாயம் எதுவுமே அவருக்கு விளங்கவில்லை.

தம் வாழ்நாளில் அவர் எத்தனையோ அழகிகளைச் சந்தித் திருக்கிறார். அறிவாளிகளுடன் பழகியிருக்கிறர். அவர்களிட மெல்லாம் காணுத கவர்ச்சியும் மயக்கமும் பார்வதியினிடத் தில் மட்டும் எப்படி வந்தன? இந்த முதிர்ந்த பிராயத்தில் உடல் உறவு சம்பந்தமான இச்சைகளுக்கெல்லாம் முடிவு சுாண வேண்டிய பருவத்தில் இந்த மயக்கம் எதற்கு?

ஆற்றலும் அனுபவமும் மிக்க சேதுபதி, திடசித்தம் வாய்ந்த இலட்சியவாதி தடுமாறி நின்றார், மனைவியின் படத்தைக் கண்டபோது அவருக்குப் பழைய நினைவுகளெல் லாம் ஞாபகத்துக்கு வந்தன.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தாய்ப்பாசம் ஒன்றையே ஆதரவாகக் கொண்டு வாழ்க்கையில் பெரும் போராட்டங் கள் நிகழ்த்தி வெற்றி கண்டவர் அவர், உழைப்பால் உயர்ந்த உத்தமர். சரஸ்வதியை மணந்த பின்னரே, அவருடைய வாழ்க்கை விரிவாக மலரத் தொடங்கியது. ஆயினும், அந்த வாழ்வின் பூரண இன்பத்தை அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை அவளுக்கு பாரதியைப் பெற்றெடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அவள் காலமாகி விட்டாள். அதற்குப் பிறகு சேதுபதி இல்லற வாழ்க்கையில் விரக்தி அடைந்து மறு மணம் செய்து கொள்வதில்லை என்ற முடிவுடன் வைராக்கிய புருஷராக இருந்து விட்டார்.

அடுத்த ஆண்டிலேயே அவருடைய தங்கை சாரதாம் பாள் கட்டிய கணவனை இழந்து கைம்பெண்ணுகிக் கண்ணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/78&oldid=689579" இலிருந்து மீள்விக்கப்பட்டது