பக்கம்:விசிறி வாழை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 விசிறி வாழை

பிேரின்ஸிபால் சாப்பிட வருவதாகச் சொல்லியிருக் கிருரே! நீங்க இல்லேன்ன!...”

பேரவாயில்லே; முடிந்தால் சாய்ந்திரம் பார்க்கிறேன். எனக்காகக் காத்திருக்க வேண்டாம். அவரைச் சாப்பிடச் சொல்லு...”

உண்மையில் சேதுபதிக்கு எந்த அவசர வேலையும் இல்லை. அவசரமாக அவருக்கிருந்த வேலே கல்கத்தாவுக்கு டெலிபோனில் பேச வேண்டியதுதான். அந்த அவசர வேலையையும் அவசரம் அவசரமாக ரத்து செய்துவிட்டு வெளியே புறப்பட்டுச் செல்வதற்கு ஒரே ஒரு காரணம் பார் வதியைச் சந்திக்கக்கூடாது என்பதுதான். அவளுடன் பேச வேண்டும் என்று எவ்வளவுக்கெவ்வளவு அவர் மனம் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்ததோ அவ்வளவுக்கு அவர் அந்த ஆசையைக் கட்டுப்படுத்திக் கொண்டு வெளியே கிளம்பிப் போய்விட்டார்.

அவர் சென்ற சிறிதுநேரத்திற்கெல்லாம். டெலிபோன் மணி அடித்தது. பாரதி ரிளeவரைக் கையிலெடுத்துப் பேசிய போது பிரின்ஸிபால் பார்வதியின் குரல் கேட்டது.

‘பாரதி எனக்கு இப்போது அவசரமாகக் கொஞ்சம் வேலே இருக்கிறது. ஆகையால், நீ எனக்காகக் காத்திருக்க வேண்டாம். மாலையில் நான் வரும்போது உன்னைப் பார்க் கிறேன். விஷ்யூ ஹாப்பி பர்த்டே!’ என்றாள்.

உண்மையில், பார்வதிக்கும் எந்த அவசர வேல்யும் இல்லை. சேதுபதி தனக்காகக் காத்திருப்பார். அவர் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும்போது நான் அங்கே போகக் கூடாது நான் வரப் போவதில்லை என்று தெரிந்ததும் அவர் பாரதியிடம் விசாரிப்பார். மாலேயில் தன்னைச் சந்திக்கும் போது ஏன் வரவில்லே?’ என்று கேட்பார். அப்படிக் கேட் கும்போது அவருக்குத் தன் மீதுள்ள அன்பும் அக்கறையும் வெளிப்படும்!-பார்வதியின் அவசரமான ஜோலிக்குக் காரணம் இதுதான்! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/80&oldid=689582" இலிருந்து மீள்விக்கப்பட்டது