பக்கம்:விசிறி வாழை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து ஏழு 77

தொழிற்சாலையில் சேதுபதிக்காகப் பல அலுவல்கள் காத்துக் கிடந்தன. ஆனல் அவை எதிலுமே சேதுபதியின் மனம் செல்லவில்லை. மீண்டும் மீண்டும் பார்வதியின் நிஜனவு ஒன்றே அவர் உள்ளத்தை அலைத்துக் கொண்டிருந்தது.

உள்ளத்தில் வெகு நாட்களாகப் புழுங்கிக் கொண்டிருந்த ஓர் எண்ணம் இமயமாக வளர்ந்து அழுத்துவது போல் தோன்றியது.

‘இந்த மனப் போராட்டத்துடன் எத்தனை நாட்கள் வேதனைப்படுவது? மனதிற்குள்ளாகவே அடக்கி வைத்திருக் கும் அந்த எண்ணத்தை இன்று வெளியிட்டுவிட வேண்டி பதுதான் என்று முடிவு செய்துகொண்டார். அடுத்தகணமே சே! பார்வதி என்னப்பற்றி எவ்வளவு உயர்வாக எண்ணிக் கொண்டிருக்கிருள்? என்னிடம் எவ்வளவு மதிப்பு வைத்திருக் கிருள். இப்படி நான் ஓர் அற்ப ஆசை வைத்திருக்கிறேன் என்று தெரிந்தால் என்னைத் தாழ்வாக எண்ணிக் கொள் வாளோ? எண்ணிக் கொள்ளட்டுமே தெரியட்டுமே. தெரிந்துதான் போகட்டுமே. ஒரு நாளேக்கு இல்லா விட் டால் ஒரு நாள் தெரிய வேண்டியதுதானே? இதற்கு ஒரு முடிவு ஏற்படவேண்டியதுதானே. இன்று மாலேயே பேச்சுக் கிடையில் திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இருக் கிறதா?’ என்று தெளிவாகத் தைரியமாகக் கேட்டு விடு கிறேன். கேட்டு நிச்சயமாக ஒரு பதிலே அறிந்து கொண்டு விடுகிறேன். ‘ .

ஒரு தீர்மானத்துக்கு வந்தவராய் நாற்காலியை விட்டு எழுந்தார், சேதுபதி. அன்று மாலே ஐந்து மணி இருக்கும். தம்முடைய ப்ங்களா வாசலில் மரத்தடி ஊஞ்சலில் உட் கார்ந்து லேசாக ஆடியபடியே ஒவ்வொரு விநாடியும் பார்வதியின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண் டிருந்தார் அவர். -

எங்கோ ஒலிக்கின்ற ஹாரன் சத்தங்களெல்லாம் பார்வதியின் காராயிருக்குமோ என்ற பிரமையை உண்டாக் கின. கடைசியில், காம்பவுண்டுக்கு வெளியே ஒரு கார் வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/81&oldid=689583" இலிருந்து மீள்விக்கப்பட்டது