பக்கம்:விசிறி வாழை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து எட்டு

முதல் நாள் இரவு வெகு நேரம் வரை கண் விழித்துப் படித்துக் கொண்டிருந்த பார்வதி அன்று பொழுது புலரும் நேரத்தில் சற்று அதிகமாகவே தூங்கி விட்டாள். தூக்கம் கலந்து அவள் படுக்கையை விட்டு எழுந்தபோது கடிகாரத் தில் மணி ஏழடித்துக் கொண்டிருந்தது. அறைக்குள் சில புத்தகங்கள் தாறுமாருகச் சிதறிக் கிடந்தன. துன்பத்துக் கும் இன்பத்துக்கும் இடையே’ என்பது அவற்றுள் ஒன்று. ‘வித் லவ் அண்ட் ஐரணி’ என்பது இன்னென்று. அந்தப் புத்தகங்களைக் கண்டபோது அவள் இதழ்களில் இலேசான புன்முறுவல் தோன்றி நெளிந்தது.

அந்தப் புன்னகைக்குள் ஏதோ ஒன்று ஒளிந்து கொண் டிருப்பதை பார்வதியைத் தவிர வேறு எவருமே அறியமாட் டார்கள்.

‘இத்தனைக் காலமும் இல்லாமல் இப்போது என்னுள் புகுந்துள்ள அந்த உணர்வுக்கு என்ன காரணம்? நான் ஏன் அவரைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கிறேன்? அவருக் கும் எனக்கும் என்ன சம்பந்தம்?

சேதுபதியின் மகள் பாரதியினிடத்தில் நிஜமாகவே எனக்கு அக்கறை இருக்கிறதா? அவளுக்கு டியூஷன் சொல் லிக் கொடுப்பதில் எனக்கு ஏன் இத்தனை ஆர்வம்? அவளுக் குப் பாடம் சொல்லித் தரும் நேரங்களில் என் மனம் ஏன் அமைதியின்றி அலேய வேண்டும்? அவரைக் காண வேண்டு மென்ற ஆவலில் என் கண்கள் ஏன் அங்குமிங்கும் சுழல வேண்டும்? இதற்கெல்லாம் என்ன பொருள்?

சேதுபதியின் கண்ணியமான, கம்பீரமான தோற்றம் அவள் கண்ணெதிரில் வந்து நின்றது. இந்தத் தோற்றத்தில் அப்படி என்ன கவர்ச்சி இருக்கிறது? என்னைக் கவர்ந்திழுக் கும் மாய சக்தி இதற்கு எங்கிருந்து வந்தது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/83&oldid=689585" இலிருந்து மீள்விக்கப்பட்டது