பக்கம்:விசிறி வாழை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 விசிறி வாழை

ஆம்; சேதுபதியைக் காட்டிலும் கவர்ச்சி மிக்க, அழகு வாய்ந்த ஆடவர்களைப் பார்வதி சந்தித்திருக்கிருள். வெளி நாடுகளில், எத்தனையோ அறிவாளிகளே, ஆராய்ச்சியாளர் களை, கல்வித் துறையில் புகழுடன் விளங்குபவர்களே, பட்டம் பெற்றவர்களைப் பார்த்துப் பேசியிருக்கிருள். கருத்து அரங்கு களில் அவர்களுடன் வாதாடி இருக்கிருள், ஆயினும் அவர் களிடமெல்லாம் காண முடியாத கவர்ச்சி, காந்த சக்தி, சேதுபதியிடம் இருந்தது. அந்தக் கவர்ச்சி, ஆண்-பெண் உறவு சம்பந்தமான உடற் கவர்ச்சி அல்ல. அதற்கெல்லாம் அப்பாற்பட்ட அறிவு பூர்வமான ஒரு சக்தி அது! அதை அவளால் விளக்க முடிய வில்லை. விளங்கிக் கொள்ளவும் முடிய வில்லே.

இரண்டாகப் பிரிந்து குப்புறக் கீழே வீழ்ந்து கிடந்த புத்தகத்தை எடுத்தபோது அதில் இரவு படித்த சில வரிகள் அவள் கவனத்துக்கு வந்தன.

‘உலக வாழ்க்கை ஒரு பாதாளக் கிணறு போன்றது. குழந்தை அதன் பக்கத்தில் நின்று கொண்டு எட்டி எட்டிப் பார்த்தால் என்ன சொல்லுவோம்? அங்கே நிற்காதே! எட்டிப் பார்க்காதே! தூர நில்’ என்போம். அவ்வாறே யாகும் வாழ்க்கையின் அபாயங்கள். கிணற்றில் வீழ்ந்து விட்டால் மீள்வது துர்லபம்.” -

நான் அத்தப் பாதாளக் கிணற்றின் அருகில் நிற்கும் ஒரு குழந்தையா? ஒருநாளுமில்லை.

இத்தனை ஆண்டுகளும் நான் கலியாணம் செய்து கொள் ளாமலே, கணவனேடு வாழாமலே இல்லறத்தின் இன்ப துன்பங்களே அனுபவிக்காமலே வாழ்ந்து விட்டேன். என் கன்னிப் பருவம் முழுமையும் தாய்மைக் கோலம் பூண்டு, குழந்தை ராஜாவை வளர்ப்பதிலேயே கழித்து விட்டேன். இனி?...

பார்வதிக்கு இந்த உலக வாழ்க்கை தெரிந்திருந்தது. பெண்மையும் பெண்மைக்குரிய ஆசாபாசங்களும் தெரிந் திருந்தன, ஆல்ை அந்தப் பெண்மை தனக்கும் உண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/84&oldid=689586" இலிருந்து மீள்விக்கப்பட்டது