பக்கம்:விசிறி வாழை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து எட்டு 8 என்பதை அவள் உணர்ந்ததில்லை. அவள் வாழ்க்கை தெரிந் தவன். ஆளுல் அந்த வாழ்க்கை தனக்கும் உண்டு என்பதை அறியாதவள்.

கீழே ராஜாவின் சீட்டிக் குரல் ஒலித்தது. காலப் பத்திரிகையைப் படித்தபடியே யோசித்துக் கொண்டிருந்த பார்வதி, மணி ஒன்பதாகி விட்டது என்பதை அப்போது தான் உணர்ந்தாள்.

வெகு நேரம் தூங்கி விட்டிருக்கிறேன். என்றுமே இப்படித் தூங்கியதில்லை. கல்லூரிக்கு நேரமாகி விட்டது. என்று எண்ணிக்கொண்டே அவசரமாக எழுந்து போய் தேதிக் காலண்டரின் முதல் நாள் தாளைக் கிழித்தெறிந்தாள். அப்போதுதான் அவளுக்கு ஞாபகம் வந்தது. ‘ஓ! இன்று பாரதிக்குப் பிறந்த நாளல்லவா? என்னச் சாப்பிடக் கூப்பிட்டிருக்கிருளே! போகலாமா, வேண்டாமா?’ என்று யோசிக்கலாள்ை.

‘இப்போது ஒருவேளை சேதுபதி வீட்டில் இருந்தாலும் இருக்கலாம். பாரதி என்ன அழைத்திருக்கும் செய்தி அவருக்குத் தெரிந்திருக்கலாம். இப்போது அங்குச் சென்றால் அவருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கலாம்’ என்று முதலில் எண்ணிள்ை. . - .

அடுத்தாற்போல், கூடாது; இப்போது போகக் கூடாது. போகாமலிருந்தால், ஒரு வேளை அவர் தன்னைப் பற்றிப் பாரதியிடம் ஏன் வரவில்லை?” என்று விசாரித் தாலும் விசாரிக்கலாம். மாலையில் என்னைச் சந்திக்கும்போது கோலையில் ஏன் வரவில்லை? என்று கேட்டாலும் கேட்கக் கூடும். அவர் என்&னப் பற்றி விசாரிக்கும் பெருமையை இப்போது போவதால் இழந்துவிடக் கூடாது’ என்று தீர் மானித்தவளாய் டெலிபோன எடுத்து, ‘பாரதி எனக்கு இப்போது கொஞ்சம் அவசர வேலையிருக்கிறது. மாலையில் வருகிறேன்’ என்று கூறிவிட்டுக் கீழே இறங்கிச் சென்றாள். அவசர அவசரமாகச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு பகவான் பரமஹம்சரையும் தேவியையும் வணங்கி விட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/85&oldid=689587" இலிருந்து மீள்விக்கப்பட்டது