பக்கம்:விசிறி வாழை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 விசிறி வாழை

காரை எடுத்துக் கொண்டு கல்லூரிக்குப் புறப்பட்டாள். கார், வாசல் கேட்டைத் தாண்டும்போது செவிட்டுப் பெருமாள் எழுந்து நின்று மரியாதை செலுத்தின்ை. கல்லூரிக் காம்பவுண்டை நெருங்கியபோது, சொல்லி வைத் தாற்போல் பிரெஞ்சு ஆசிரியை மிஸஸ் அகாதா காலை விந்தி விந்தி நடந்து வந்து கொண்டிருந்தாள் அகாதா வைக் கண்டதும் பார்வதி கைக் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்தடிக்க ஐந்து நிமிஷம்! -

காரைத் தன் அறைக்கு வெளியே கொண்டு போய் நிறுத்தியபோது அட்டெண்டர் ரங்கசாமி வழக்கம்போல் காரின் கதவைத் திறக்க ஓடி வந்தான்.

குறித்த நேரத்தில் கல்லூரிக்கு வந்துவிட்டதில் பார்வதிக்குப் பரம திருப்தி அதில் அவள் எப்போதுமே உஷார்!

உள்ளே போய், நாற்காலியில் அமர்ந்ததுதான் தாம தம், இயந்திரகதியில் இயங்கத் தொடங்கி விட்டாள்.

எல்லா வேலைகளையும் முடித்தானதும் அன்று வந்த தபால்களை ஒவ்வொன்றாக எடுத்துப் படிக்கத் தொடங்கினுள், அந்தக் கடிதங்களில் கல்கத்தா ராமகிருஷ்ண மடத்தி லிருந்து வந்திருந்த அழைப்புக் கடிதமும் ஒன்று. உலகத்து அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு விவாதிக்கப் போகும் வேதாந்த விசாரணையில் பார்வதியும் பங்கு பெறவேண்டு மென்பது அழைப்பாளர்களின் விருப்பம்.

வேறொரு சமயமாயிருந்தால், பார்வதி அந்த அழைப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டிருப்பாள். தனக்குக் கிடைத்த ஒரு பெருமையாகவும் எண்ணியிருப் பாள். ஆனல் இன்று இப்போது அவள் உள்ளப் போக்கு அடியோடு மாறியுள்ள இந்த நேரத்தில் அவளால் அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

மால் வேண்களில் சேதுபதியைச் சந்தித்துப் பேசுவதில் அவள் பேருவகை யடைந்தாள். அதைக் காட்டிலும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் இந்த உலகத்தில் வேறு ஒன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/86&oldid=689588" இலிருந்து மீள்விக்கப்பட்டது