பக்கம்:விசிறி வாழை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து எட்டு - 85

டிருந்தபோது பார்வதியின் உள்ளத்தில் அமைதி இல்லை. சேதுபதியையே எண்ணி எண்ணிக் (குழம்பிக் கொண் டிருந்தது.

‘இன்று அவருடைய அறைக்குச் சென்று அவருடன் வெகு நேரம் பேசிக் கொண்டிருக்க வேண்டும். பேச்சுக் கிடையில் தன் உள்ளத்தில் சஞ்சலமிட்டுக் கொண்டிருக்கும் எண்ணத்தை, வெளிப்படையாகச் சொல்லிவிட வேண்டும். அவர் என் அந்தரங்கத்தை அறிய நேரிட்டால் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வார்...? அவர் என்னிடம் கொண்டுள்ள மதிப்பை மாற்றிக்கொண்டு விடுவாரோ?”

அடுத்த கணமே, மாற்றிக் கொள்ளட்டும்; எதை வேண்டுமானலும் எண்ணிக் கொள்ளட்டும். மனத்திற்குள் . ளாகவே, எண்ணி எண்ணிப் புழுங்கிப் புழுங்கி வேதனைப் படுவது என்னல் இனி முடியாத காரியம். அவருடைய உறவை, அறிவு பூர்வமான நட்பை என் உள்ளம் நாடுகிறது. அதை நான் அவரிடம் கூறியாக வேண்டும். என் எண் ணத்தை, என்னுள் புகுந்துள்ள அபூர்வ உணர்வை, என்னுள் ளேயே எத்தனைக் காலத்துக்கு மறைத்து வைத்துக்கொண் டிருப்பேன்...?? . -

புயலில் சிக்கி அலையும் துரும்பைப்போல் எந்த முடிவுக் கும் வரமுடியாமல் அகலந்து கொண்டிருந்தது பார்வதியின் உள்ளம், - -

“அதே நேரத்தில் பார்வதி அனுபவித்துக் கொண் டிருந்த வேதகனகன் யெல்லாம் அறைக்குள் உட்கார்ந்திருந்த சேதுபதியும் அனுபவித்துக் கொண்டிருந்தார். பார்வதி தன் அறைக்குள் வந்து பேசிக் கொண்டிருக்கும்போது, ‘எப்படித் தன் விருப்பத்தை வெளியிடுவது, விஷயத்தை எப்படித் தொடங்குவது, எவ்வாறு கூறி முடிப்பது?’ என்று தீவிர மாக யோசித்துக் கொண்டிருந்தார். தம்முடைய அந்தரங் கத்தை அறிய நேரிட்டால், அவள் தன்னப்பற்றி என்ன தினப்பாளோ? திணைக்கட்டும். அதற்காக எத்தனைக் காலம் சொல்லாமலேயே இருக்கமுடியும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/89&oldid=689591" இலிருந்து மீள்விக்கப்பட்டது