பக்கம்:விசிறி வாழை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து ஒன்பது

“வணக்கம்’ என்று சொல்லிக்கொண்டே சேதுபதியின் அறைக்குள் பிரவேசித்த பார்வதி, கலக்கமும் பரவசமும் கலந்த உணர்ச்சி வசப்பட்டவளாய், தெய்வ சந்நிதியில் மெய்ம்மறந்து நிற்கும் ஒரு பக்தனேப்போல் தன்னை மறந்த நிலையில் அசைவற்று நின்று கொண்டிருந்தாள். அதே நிலை தான் சேதுபதிக்கும். பார்வதியைக் கண்டதும் வழக்க மாகக் கையைக் காட்டி அமரச் சொல்லும் அவர், அன்று உண்மையிலேயே ஒரு தெய்வச் சிலேபோல் உட்கார்ந்திருந் தார்.

இந்த மெளன. நிலே இரண்டு நிமிடங்கள் நீடித்தது. பார்வதி தானகவே உட்கார்ந்திருக்கலாம்; அல்லது சேது பதியாவது அவளே உட்காரச் சொல்லியிருக்கலாம். ஆனல் இருவருமே ஒருவரில் ஒருவர் லயித்து, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, ஒருவருடைய இதய ஆழத்தின் அடி வாரத்தில் புதைந்து கிடக்கும் இரகசியத்தை மற்றவர் ஊடுருவி அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் வாயடைத்துப் போன ஊமைகளாகி, மெளன. மொழியில் சம்பாஷித்த படியே, தத்தம் உணர்ச்சிகளே, ஆசைகளே உள்ளத்தில் புதைந்து கிடக்கும் எண்ணங்களே வெளியிட முயலும் நடிப்புக்கலேயில் இரண்டு நிமிடங்களைக் கழித்து விட்டனர். கடைசியில், சுய உணர்வு பெற்று, உட்காருங்கள்’’ என்று கூறிய சேதுபதி பார்வதியைப் பார்த்தபோது, அவள் நாற் காலியில் அமர்ந்துவிட்டிருப்பதைக் கண்டார்.

‘‘மன்னிக்க வேண்டும்; தாங்கள் எது பற்றியோ தீவிர மாகச் சிந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில்...’ -

சேதுபதி சிரித்தார். அது பொருளற்ற ஒரு வறட்டுச் சிரிப்பு

அவர் உள்ளம் எதையோ எண்ணிக் கொண்டிருந்த நிலையில் உதடு சிரிப்பைக் காட்டிக் கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/91&oldid=689594" இலிருந்து மீள்விக்கப்பட்டது