பக்கம்:விசிறி வாழை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 விசிறி வாழை

தாங்கள் காலேயில் வரப்போவதாகப் பாரதி சொல்லிக் கொண்டிருந்தாளே, ஏன் வரவில்லே! என்று சேதுபதி ஆவலுடன் கேட்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த பார்வதிக்கு அவர் ஒன்றுமே கேட்காதது மிக ஏமாற்றத்தை அளித்தது.

அடுத்த கணமே, தன்னிடம் அவருக்கு அவ்வளவு அக்கறை இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன அசட்டுத்தனம்?’ என்று எண்ணிக் கொண்டாள்.

உதட்டில் தவழ்ந்த புன்சிரிப்புக்கும் உள்ளத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த உணர்ச்சிகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இன்றிச் சிந்தனையில் மூழ்கியிருந்த சேதுபதி, பார்வதியை மறந்துவிட்டவரைப் போல் காணப்பட்டாலும், அவருடைய எண்ணமெல்லாம் அவளைப் பற்றியதாகவே இருந்தது. அவர் அவளேக் கவனிக்காததுபோல் பார்த்துக் கொண்டிருந்தார். அவளே மறந்துவிட்டவர்போல் அவளேயே எண்ணிக் கொண்டிருந்தார்.

சாந்தமே வடிவமாக, ஆனல் சலனமே இதயமாக அவர் எதிரில் உட்கார்ந்திருந்த பார்வதிக்குப் பேசத் தோன்ற வில்லை; என்ன பேசுவது என்றும் புரியவில்லே.

இருவரும் ஒரே மாதிரி எண்ணிக்கொண்டு, பார்த்துக் கொண்டு, சிந்தித்துக் கொண்டு, என்ன பேசுவது என்று தோன்றாமல் திகைத்துக்கொண்டு அப்படியே, அதே நிலையில், எப்போதும், என்றென்றும், இருந்துவிடவே விரும்பினர்கள். அந்த மெளன நிலையில் அவர்கள் இருவ ருக்குமே அத்தனே இன்பமும் சுகமும் இருந்தன. அப்படி ஒரு சுகம் இருப்பதை இருவருமே தனித்தனியாக உணர்ந்து அனுபவித்தார்கள். ஆனல் வாய்விட்டுச் சொல்லிக் கொள்ளவில்லே.

இருவர் உள்ளங்களும் நெருங்கிய நிலையில் உறவாடிக் கொண்டிருந்த போதிலும், இருவருக்கும் தங்கள் ஆர்வத்தை வெளியிடமுடியாத நில அது ஓர் அபூர்வ நிலை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/92&oldid=689595" இலிருந்து மீள்விக்கப்பட்டது