பக்கம்:விசிறி வாழை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 விசிறி வாழை

என்பதை நன்கு உணர்ந்திருந்த அவள் நீறுபூத்த நெருப் பாக அடக்கமே உருவாக இருந்தாள்.

சேதுபதியின் அறிவாற்றல், ஆழ்ந்த படிப்பு, உலக அனுபவம், எந்த விஷயத்திலும் அவருக்குள்ள ஒப்பற்ற ஞானம் - இவைகளைக் காணும்போது அவள் தன்னை மின் விளக்கின் அருகில் பறக்கும் கேவலம் ஒரு மின்மினிப் பூச்சி யாகவே கருதிக்கொண்டாள்.

அந்தச் சுழலும் உலகத்தைத் தன் விரல்களால் அசைத்து உருட்டியவாறே அவள் மெளனத்தில் மூழ்கியிருந் தாள். அந்த மெளனம் அவளுக்கே வேதனையைத் தந்தது.

சேதுபதியிடம் ஏதேனும் பொதுவாகப் பேசவேண்டும் போல் இருந்தது. பேசிள்ை; யுத்தம், அணுகுண்டு, துப்பாக்கி இவையெல்லாம் இல்லாமலே இந்த உலகம் இயங்க முடியாதா?’’- பார்வதியின் குரல் அசாதாரணமாகவே ஒலித்தது.

  • இதோ இயங்கிக் கொண்டிருக்கிறதே! ’’ என்று சொல்லிவிட்டுப் பார்வதியையும் சுழன்று கொண்டிருந்த அந்தக் கோளத்தையும் மாறி மாறிப் பார்த்தார் சேதுபதி, உதட்டில் புன்னகை தவழ...

‘உலக மக்கள் யுத்த அபாயம் இன்றி வாழவே வழி யில்லேயா?’ பார்வதி மீண்டும் கேட்டாள்.

சேதுபதி சிரித்துக் கொண்டே சொன்னுர் i “தங்கள் கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதில் கூறிவிட முடியாது. ஆனாலும் சுருக்கமாகச் சொல்கிறேன். எறும்புப் புற்றைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அதில் கோடிக் கணக்கான எறும்புகள் எவ்வளவு ஒழுங்காகச் சண்டை சச்சரவில்லாமல் தங்கள் காரியங்களைச் செவ்வனே நடத்து கின்றன! அவற்றுக்கு மகாத்மாக்களோ, ஞானிகளோ யாரே னும் உபதேசம் செய்கிறார்களா? இந்த உலகம் பெரிய எறும் புப் புற்றுதான். இதில் நாம் அனைவரும் எறும்புகள்போல் வாழ்க்கையைச் சண்டை சச்சரவின்றி ஒழுங்காக நடத்தி ல்ை, அணுக்குண்டு, யூத்தம் எதுவுமே இருக்காது. நமக்குள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/94&oldid=689597" இலிருந்து மீள்விக்கப்பட்டது