பக்கம்:விசிறி வாழை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து ஒன்பது 93

பார்வதி திகைப்புடன் அவரைப் பார்த்தாள்.

  • உங்கள் திகைப்பு எனக்குப் புரிகிறது. அதாவது, இன்ஷ9ரன்ஸ் கம்பெனிக்கு நஷ்டம்தானே? அந்த இன் ஷ9ரன்ஸ் கம்பெனி எனக்குச் சொந்தமாயிருந்தும் அந்த நஷ்டத்தை நான் பெரிதாகக் கருதவில்லேயே என்றுதானே யோசிக்கிறீர்கள்?’ என்றார் சேதுபதி.

பார்வதி தலையசைத்தாள்.

  • அதைத்தான் நான் இல்லே என்கிறேன். பஞ்சாலைக்கு நஷ்டமில்லை என்பதைத் தாங்களே ஒப்புக்கொள்கிறீர்கள். நஷ்டம் இன்ஷ9ரன்ஸ் கம்பெனிக்கும் இல்லை என்று நான் கூறுகிறேன். அது எப்படி என்பதையும் சொல்கிறேன். எல்லா வியாபாரங்களையும்போல் இன்ஷ9ரன்ஸ் கம்பெனி யும் ஒரு வியாபாரம். ஒரு வியாபாரம் என்றல், அதற்கு வரவு-செலவு இரண்டும் உண்டு. நான் ஒரு தொழிற்சாலை நடத்துகிறேன். அந்தத் தொழிற்சாலையில் உற்பத்தி செய் வது எனக்குச் செலவு. அவற்றை விற்பனை செய்வது வரவு இல்லையா...” -

தலையசைத்தாள் பார்வதி.

அதைப் போலவே இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கும் வரவு செலவுக் கணக்கு உண்டு. இன்ஷ9ர் செய்துகொள்ளு கிறவர்கள் கட்டும் பாலிஸிப் பணமெல்லாம் வரவு என்றால், இம்மாதிரிக் கொடுக்கப்படும் நஷ்ட ஈடுகள் எல்லாம் அவர் களுடைய செலவாகும். நஷ்டஈடு கொடுத்ததுபோக, மிச்ச மிருப்பது லாபம். இப்போது புரிகிறதா? இது இன்ஷ9ரன்ஸ் கம்பெனியின் செலவுக் கணக்கில்தான் வரும். நஷ்டக் கணக்கில் வராது. அதனுல்தான் இந்த நஷ்டத்தை தேசிய நஷ்டம் என்று மட்டும் கூறுகிறேன்.”

இருட்டறைக்குள் மின் விளக்கைப் போட்டதும், பளிச் சென்று ஒளி தோன்றி, இருள் முழுவதும் விலகி விடுமே அப்படி இருந்தது பார்வதிக்கு.

வியப்போடு சேதுபதியையே மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். அவள் பேசாததை யெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/97&oldid=689600" இலிருந்து மீள்விக்கப்பட்டது