பக்கம்:விசிறி வாழை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 விசிறி வாழை

அவள் கண்கள் பேசின. அந்தப் பார்வையில் ஏதேதோ பொருள்கள் பொதிந்து கிடந்தன.

பார்வையின் முன்னுல் ஞான விளக்காக ஓங்கி உயர்ந்து வான முட்டுவது போன்ற விசுவரூபம் எடுத்துக் காட்சி அளித்தார் சேதுபதி. அவரைப்பற்றி அவள் எவ்வளவோ உயர்வாக எண்ணிக் கொண்டிருந்தாள். இன்று அந்த உயர் வுக்கெல்லாம் உயர்வாக இமயமாக வளர்ந்து காட்சி அளித் தார் அவர். அந்த இமயமலைக்கு முன்னுல் அவள் ஒரு சிறு குன்று சின்னஞ்சிறு குன்று! அப்படித்தான் எண்ணிஞள் அவள்.

“அப்பா!’ என்று அழைத்துக்கொண்டே அறைக்குள் நுழைந்த பாரதியின் குரல், பிரன்ஸிபாஃல விழிப்புறச் செய்தது.

இரண்டு கோப்பைகளில் காப்பியைக் கொண்டுவந்து வைத்த பாரதி, பிரின்ளிபாலைப் பார்த்து, ப்ளீஸ்...” என்றாள்.

“உனக்கு இன்று பர்த் டே அல்லவா? மிக்க மகிழ்ச்சி; இப்போது உன் வயது என்ன?’ என்று கேட்டாள் பார்வதி.

‘இருபது’’ என்றாள் பாரதி. ‘ஓ, டீன் ஏஜ் முடிந்துவிட்டதென்று சொல்?’ சிரித்துக் கொண்டே கூறினுள் பார்வதி. -

பதில் கூருமல் வெட்கத்துடன் நின்ற பாரதி, அப்பா, நான் கொஞ்சம் வெளியே போய் என் பிரண்டைப் பார்த்து விட்டு வரப்போகிறேன்’ என்று தன் தந்தையிடம் ஆங் கிலத்திலேயே பேசி உத்தரவு கேட்டாள்.

அந்த பிரண்ட் கர்ல் பிரண்டா, பாய் பிரண்டா’ என்று சேதுபதி கேட்கவில்லை. அப்போது இருந்த மன நிலையில் அவருக்கு அதெல்லாம் கேட்கத் தோன்றவில்லே.

பார்வதிக்குத் தன்னுடைய டீன் ஏஜ் பருவம் பற்றிய நினைவு தோன்றிவிடவே, அந்தச் சிந்தனையில் மூழ்கிப் போளுள்.

‘ம்...இளமைப் பருவத்துக்குள்ள மகிழ்ச்சியும் உற்சாக முமே தனி!” என்று பெருமூச்சுடன் கூறினுள் பார்வதி.

வி. வா.-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/98&oldid=689601" இலிருந்து மீள்விக்கப்பட்டது