பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

விஜயலக்ஷ்மி பண்டிட்


ஆயினும் அங்கே 'தான் தனியன்' என்று குமைந்த ஆத்மா ஒன்று உண்டு. சிறுவன் ஜவாஹர்லால் நேரு தான் அது. தனக்குத் தம்பியோ தங்கையோ இல்லையே என்று பெரிதும் குறைப்பட்டுக் கொண்டிருந்தார் அவர். அவருடைய உள்ளம் குளிரும்படி, நேரு குடும்பத்தின் செல்வ மகளாகப் பிறந்தாள் விஜயலக்ஷ்மி.

மோதிலால் கேருவின் மனைவி சொரூபராணி, ராணி நேரு என்றே குறிப்பிடப்பட்டாள் அவள். அவள் இனிய குணமுடைய எழிலி.

"அவள் அழகைப் போற்றினேன் கான், அதிசயங்கள் போன்ற அவளது சின்னஞ்சிறு கைகளையும் பாதங்களையும் நான் ஆசையுடன் விரும்பினேன்' என்று ஜவாஹர்லால் தனது அன்னையின் அழகு பற்றி வியந்திருக்கிறார்.

"என் தாய் மிகவும் இனிய மாது. ஐந்தடி உயர முள்ள அழகுச் சிறு உருவம் தான் அவள். மிகவும் நேர்த்தியான ஒரு பொம்மை மாதிரி, பூரண உருவமும் அழகு அம்சங்களும் பொருந்தியவள். சரியான காஷ்மீரிப் பெண். ஆனாலும் பண்பினால் அவள் பொம்மை அல்லள் என்பதைக் காலம் பின்னர் உணர வைத்தது." விஜயலக்ஷ்மியின் தங்கை கிருஷ்ணு இப்படி எழுதியிருக்கிறாள் ராணி நேருவைப் பற்றி.

பண்டித நேருவின் குடும்பத்தினர் காஷ்மீர பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள். மோதிலால் நேருவின் முன்னேர் பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே காஷ்மீரிலிருந்து இறங்கி டில்லிக்கு வந்து