பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

விஜயலட்சுமி பண்டிட்



லேயே ஜெர்மனி, பிரான்ஸ் முதலிய தேசங்களைக் கண்டு களிக்கும் வாய்ப்பு விஜயலட்சுமிக்கு கிடைத்துவிட்டது.

சொரூபாவுக்கு ஆசிரியையாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றிருந்த மிஸ் ஹுப்பர் பழங்காலத்துக் கல்வி முறைகளில் நம்பிக்கை கொண்டிருந்தாள். உயர்ந்த குலத்தில் தோன்றிய அம்மாது உத்தம குணங்களின் உறைவிடமாகவும் போற்ற தகுந்த திறமைகள், பயிற்சிகளின் உருவமாகவும் விளங்கினாள். அவள் பழகுவதற்கு இனியவள். ஆனால் கடமையில் கண்டிப்பானவள். தனது மனைவியிடம் அடக்கம், ஒடுக்கம், கீழ்ப்படிந்து செயல்படவும் கட்டுப்பாடான சுபாவம் முதலியவைகளை அவள் எதிர்பார்ப்பது வழக்கம். விஜயலட்சுமி தனது ஆசிரியைக்கு அதிகமாக தொந்தரவு அளித்தது கிடையாது.

விஜயலட்சுமியின் பெற்றோர் ஐரோப்பாவிலிருந்து திரும்பிய பிறகு அவளுக்கு ஒரு தம்பி பிறந்தான். ஆனால், அக்குழந்தை அதிகநாள் ஜீவிக்கவில்லை. ராணி நேருவுக்கு அது மகத்தான இதய வேதனை அளித்துவிட்டது. அவள் அடிக்கடி நோய் வாய்ப்படலானாள்.

அந்நிலையில், 1907-ம் வருஷம் நவம்பர் மாதம் சொரூபாவின் தங்கையாகிய கிருஷ்ணாவைப் பெற்றெத்தாள் ராணி நேரு,மிகுதியும் கஷ்டப்பட நேர்ந்தது. அவள் பிரசவத்துக்குப் பிறகு பல வாரங்கள் வரை அத்தாய் வாழ்வுக்கும் சாவுக்குமிடையே ஊசலிட்ட வாறு படுக்கையில் கிடந்தாள். அப்போது விஜயலட்சுமிக்கு ஏழு வயது, தனக்கு ஒரு 'சின்னப் பாப்பா' தங்-