பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

விஜயலட்சுமி பண்டிட்



என்ற செய்தி கிடைத்ததுமே ஆனந்த பவனத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பல வாரங்களாக வரவேற்புக்குரிய ஏற்பாடுகள் நடைபெற்றன. ஒரு இளவரசனை எதிர்கோக்கி விசேஷ ஏற்பாடுகள் செய்வது போலவே அம்மாளிகையிலும் காரியங்கள் நடைபெற்றன. ராணி நேரு ஈடு இணையில்லா ஆனந்தத்திலேதான் மிதந்தாள். பெற்றோரின் உற்சாகமும் மகிழ்ச்சியும் சகோதரிகளுக்கு வருத்தம் அளிக்கத்தான் செய்தன. கிருஷ்ணாவுக்கு தான் அதிகமான இதய வேதனை இருந்தது. அண்ணனைக் கண்ட பிறகு, நேருவின் அழகிய முகத்தையும், மோகன முறுவலையும், பழகிய விதத்தையும் அனுபவித்த பின்னர் அவளால் வெறுப்பையும் பொறுமையையும் வளர்க்க முடியவில்லை!

அத்தியாயம்-3

இந்தியாவின் அரசியல் களத்திலே அதிர்ச்சிகளும் தேக்க நிலைகளும் மாறிமாறித் தோன்றிக் கொண்டிருந்த காலம் அது. அடிமைப் பிடியை உணர்ந்து நிமிர்ந்து சற்றே உலுக்கிக் கொடுத்தது இந்தியா. அது நடந்தது 1857-ம் ஆண்டில் 'சிப்பாய்க் கலகம் ' என்று பெயரிடப் பெற்றுவிட்ட அந்நிகழ்ச்சிதான் இந்தியரின் முதல் புரட்சியாகும்.

அதன் பிறகு 1907-ம் ஆண்டு முதல் இந்தியாவிலே குமுறலும் கொந்தளிப்பும், உரிமைக் கிளர்ச்சிகளும் வெடிக்கலாயின. அந்நிய ஆதிக்கத்துக்கு உட்பட்டு அடிமை வாழ்வு வாழ்வதை மேலும் சகியோம் என்று உறுதி பூண்டது. இந்தியா, திலகர், அரவிந்த கோஷ்