பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

21


போன்றவர்களின் பெயரும் செயல்களும் உலகின் பல திக்குகளிலும் எதிரொலி எழுப்பின. வங்காளத்திலே துணிகரச் செயல்கள் நிகழ்வது சர்வ சாதாரணமாகி விட்டது. மிதவாதிகளும் தீவிரவாதிகளும் இந்திய அரசியலில் சிரத்தை காட்டினர். மோதிலால் நேருவும் காங்கிரசில் சேர்ந்தார். ஆனால் அவர் மிதவாதியாகத் தான் இருக்தார்.

ஆண்டுதோறும் காங்கிரஸ் மகாசபை கூடிக் கொண்டு தானிருந்தது. ஆயினும் அரசியல் வட்டாரத் தில் தேக்கம்தான் ஊறி நின்றது. அந்நிலேயிலேயே தான் முதலாவது உலக யுத்தம் தோன்றியது.

இங்குள்ள அரசியல்வாதிகளின் பேச்சுக்கும் கவனத்துக்கும் உரிய விஷயமாகத் தான் விளங்கியது 'எங்கோ கடந்த யுத்தம் '. யுத்த பயங்கரம் இந்தியா மீது கவியவில்லை. யுத்தம் இந்தியாவையோ, இந்தி யரையே பாதிக்கவுமில்லை, மோதிலால் நேருவின் ராஜரீகமான வாழ்விலே எவ்விதமான குறையும் ஏற்பட்டுவிடவில்லை.

1916-ம் வருஷம் மோதிலால் தன் செல்வப் புதல்வனின் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்தத் திட்டமிட்டார். டில்லி மாநகரில் மணமகள் வீட்டில் தான் கல்யாணம். எனினும் 'ஆனந்த பவன'த்தில் பல மாதங்களாக விமரிசையான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. ஆபரணங்கள் செய்வோரும், ஆடைகள் தயாரிப்போரும், வியாபாரிகளும், உறவினருமாகப் பெருங்கூட்டம் கூடியிருந்தது அங்கே. பகல் பூராவும்

2

2