பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

25


 சேர்ந்து கல்வி பயிலவில்லை. பயில ஆசைப் பட்டதுமில்லை、

ஆனால், கிருஷ்ணா பள்ளிக்கூட அனுபவம் பெறத் தவித்தாள். தந்தை பிடிவாதமாக மறுத்தார். மகளோ அவரை விட அதிகமாக அடம் சாதித்தாள். முடிவில் தந்தைதான் விட்டுக் கொடுக்க நேர்ந்தது! கிருஷ்ணா வெற்றி மிடுக்குடன் பள்ளியிற் சேர்ந்தாள். புதுப்புது அனுபவங்களும் புதிய புதிய நண்பர்களேயும் அடைந்தாள்.

மிஸ் ஹுப்பர் சென்றதிலிருந்து தங்கை கிருஷ்ணாவைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு விஜயலஷ்மிக்கு வந்து சேர்ந்தது. தாயார் நோயின் காரணமாக பலவீன நிலையிலிருந்ததால், அவளால் இளைய மகளைக் கவனித்து வளர்க்க முடியாமல் போயிற்று. சொரூபா தங்கையிடம் கண்டிப்பாகவோ, மூத்தவள் என்ற மிடுக்குடனே நடந்து கொண்டதே இல்லை. கிருஷ்ணாவைத் தனது இஷ்டம் போல் நடந்து கொள்ள விட்டு விட்டாள் அவள். அது தான் அக்காளுக்குச் செளகரியமாக இருந்தது; தங்கைக்கும் மிகவும் பிடித்திருந்தது.

விஜயலஷ்மிக்கு கவிதையில் தனி மோகம் உண்டு கிருஷ்ணாவுக்கும் அது புடிந்திருந்தது. ஆகவே அவர்கள் இருவரும் தினந்தினம் மாலை வேளையில் தோட்டத்தில் மரத்தடியில் அமர்ந்து கவிதைகளை ரசித்து மகிழ்வதை வழக்கமாகக் கொண்டு விட்டனர். சொரூபா உரிய பாவங்களோடு கவிதைகளை வாசிப்பாள். தங்கை ஆழ்ந்து கவனித்து அனுபவிப்பது வழக்கம். இருவரிடை,-