பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

விஜயலக்ஷ்மி பண்டிட்


 யேயும் இனிய அன்புப் பிணைப்பு ஏற்பட்டு வளர்ந்து வந்தது. கிருஷ்ணாவின் சிறுபிராயத்திலே விஜயலஷ்மி தான் தங்கையின் தோழியாகவும், நல் வழிகாட்டியாகவும், அன்பு நிறைந்த ஆசிரியையாகவும் விளங்கினாள்.

அத்தியாயம் 4.

இந்தியாவில் காங்கிரசின் சக்தி வளர்ந்து வந்தது. சுதந்திர ஆர்வம் நாடு முழுவதும் தலை தூக்கலாயிற்று. மகாத்மா காந்தியின் பெயர் மந்திரம் போல் எங்கும் ஒலிக்க தொடங்கியது.

முதலாவது உலக மகாயுத்தம் ஒரு சில முதலாளிகளைப் பெரும் பணக்காரர்களாக மாற்றிவிட்டது; தொழில் துறையில் அபிவிருத்தி ஏற்படுத்தியிருத்தது.ஆயினும் பெரும்பான்மை மக்கள் மிகுந்த தொல்லைகளை அனுபவித்து, விடுதலை கிட்டதா என்று ஏங்கிக் கிடந்தவர்.

நாட்டினரை அடக்கி ஒடுக்குவதற்காக் கடுமையான அடக்குமுறைப் பாணங்களையும் புதிய புதிய சட்டங்களையும் ஏவிக்கொண்டிருந்தது.ஆங்கிலேய அரசாங்கம், ஆளவந்தவர்களின் அட்டூழியங்க்ள் எல்லோர் உள்ளத்திலும் வெருப்பையே விதைத்து வளர்த்தன.

இந்தியா பூராவும் கிளர்ச்சிகளும், சாத்வீகப் போராட்டங்களும் ஏற்ப்பட்டன. சில இடங்களில் பலாத்காரச் செயல்களும் வெடித்தன. காந்திஜீ சத்தியாக்கிரக சபை ஒன்று தொடங்கிப் போராட்டம் நடத்தி வந்தார்.