பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

விஜயலக்ஷ்மி பண்டிட்


குதிரைகளை அவர் மிகுதியும் விரும்பினார். அவற்றிடம் விவரிக்க முடியாத அன்பு காட்டினர். எண்ணற்ற குதிரைகளை வளர்ப்பதில் பெருமை கொண்டிருந்தார். இருந்தாலும் என்ன செய்வது? வேறு வழி இல்லை.

அடுத்தபடியாக, பவனத்திலே பட்டாளம் போல். நிறைந்திருந்த பணியாளர்களை வேலையிலிருந்து நிறுத்தினார். எந்தெந்த விதமாக வெல்லாம் செலவைக் குறைத்துதுச் சிக்கனப்படுத்த முடியுமோ, அவற்றை அனுஷ்டிக்க நேரு குடும்பத்தினர் தயங்கவில்லை.

விருந்துகளும் கேளிக்கைகளும் இல்லாது போயின. இரண்டு மூன்று சமையல்காரர்கள் இருந்த வீட்டில் ஒருவன் போதும் என்று தீர்மானிக்கப்பட்டது. அகேக பட்லர்களும், அவர்களுக்குத் துணையாகத் திரிந்த எடுபிடி சிப்பந்திகளும் வேலை இழந்தனர். மாளிகைக்கு அழகு செய்து விளங்கிய விலைமதிப்பில்லா ஜம்பப் பொருள்கள் பலவும் விற்பனையாயின. ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து பழகிய நேரு குடும்பத்தினர் எளிய வாழ்க்கையை அனுபவித்து உணரலாயினர். இவை எல்லாம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் அளவிட இயலாத வேதனையைப் புகுத்தியது இயற்கைதான்.

தலைகீழான இத்தகைய திடீர் மாறுதல் ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் இதுதான் என்று ஒரு சம்ப வத்தை வீட்டு வேலைக்காரர்கள் குறிப்பிட்டுப் பேசுவது சகஜமாகப் போயிற்று. விசித்திரமான நிகழ்ச்சி தான் அது. இந்தியரின் உள்ளத்தில் உறைந்து கிடக்கும் புராதனமான நம்பிக்கை தூண்டிய பேச்சு அது.