பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

41


மண்றாடினாலும் சரி தந்தை நேரு தனது வைராக்கியத் தைத் தளர்த்தியதே இல்லே. பலர் பெருந்தொகை தருவதாக ஆசை காட்டுவர் ; எனினும் அவர்கள் முயற்சி பலித்தது கிடையாது. ஒரு சமயம் கட்சிக்காரர் ஒருவர் தனது வழக்கு ஒன்றை நடத்தித் தருவதற்கு அவருக்கு லட்சம் ரூபாய் தருவதாக முன்வந்து வேண்டி னார். அந்தச் சந்தர்ப்பத்தில் மோதிலாலுக்குப் பொரு ளாதாரக் கஷ்டமும், பணத்தேவையும் அதிகம் தான். என்றாலும், கொண்ட கொள்கையே பெரிது என்ற உறுதி பூண்ட நேரு அதை மறுத்து விட்டார்.

இவ்வித அரும் குணங்கள் பெற்ற மோதிலால் இந்தியாவின்இணயிலாத்தலைவர்களில்ஒருவராகஅழியாப் புகழ் பெற்றுள்ளது நியாயமான சிறப்பு தான்.

அத்தியாயம் 6.

1931-ம் வருஷம் ஆங்கிலேய அரசாங்கம் இந்திய அரசியல்வாதிகளை இஷ்டம் போல் சிறைகளுக்குள் தள்ளிப் பூட்டி வைத்தது.

அந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் நாள் மாலையில் தான் போலீசார் முதன் முறையாக ஆனந்த பவனத்தில் அடி எடுத்து வைத்தார்கள். வீட்டைச் சோதனை போட்டார்கள். மோதிலாலையும் ஜவாஹரையும் கைது செய்து அழைத்துச் சென்றார்கள்.

அதற்குப் பிறகு போலீஸாரின் திடீர் வருகையும் பரிசோதனைகளும் அடிக்கடி நேரிடும் நிகழ்ச்சிகள் ஆகி விட்டன. தந்தையும் மகனும், நாடாறு மாதம் காடாறு