பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

விஜயலக்ஷ்மி பண்டிட்


வளர்த்து விட்ட பல பண்புகள் அவளுக்கு திருப்தி தரவில்லை தான். தனது பெண்கள் தலைமுடியைக் குட்டையாகக் கத்தரித்துக் கொண்டு திரிந்ததும், கையில்லாத ரவிக்கை அணிந்து காட்சி அளித்ததும் அவளுக்குப் பிடிக்கவில்லைதான். ஆனாலும் அவள் வாய்திறந்து தனது ஆட்சேபணைகளைச் சொன்னதில்லை.

ராணி நேருவின் அக்காள் ஒருத்தி அவர்கள் குடும்பத்திலேயே வாழ்ந்து , வந்தாள். எல்லோரும் அவளை 'பீபீ அம்மா' என்றே அழைப்பது வழக்கம். அவளுக்கு பதிமூன்று அல்லது பதினான்கு வயது இருக்கும் போதே மணலினை முடிந்திருந்தது. பதினாறு வயதான போது அவள் கணவன் வீடு அடைந்தாள். ஒரு சில மாதங்களிலேயே கணவனை பறிகொடுத்தாள் . நீந்திக் களித்து நீராட போன இளைஞனை மரணம் கொத்திக்கொண்டு போய்விட்டது. அவளுக்கு 'பால்ய விதவை'என்ற அந்தஸ்த்து வந்து சேர்ந்தது. அன்று முதல் அவள் வாழ்வின் கொடுமைகளைச் சகித்து வந்தாள் . வாழ்க்கைத் தணலிலே தன்னையே புடம் போட்டு மாண்புற்ற மாசிலாத் தங்கம் அவள். நேரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அவளிடம் பேரன்பு உண்டு. தங்கை ராணியிடம்'பீபி அம்மா'வுக்கு அபாரப் பிரியமும் பற்றுதலும் உண்டு அவளது குழந்தைகளிடம் பெரியம்மாவுக்குக் 'கொள்ளை ஆசை'.

விஜயலக்ஷ்மிக்கும் கிருஷ்ணாவுக்கும் எத்தனையோ கதைகள் சொல்லி உள்ளத்தைப் பண்படுத்திய பெருமை பீபி அம்மாவுக்கு உண்டு. மோகினிக் கதைகள், தெய்வக் கதைகள், வீரர்களைப் பற்றிய கதை-