பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

விஜயலக்ஷ்மி பண்டிட்


தந்தை நேரு தனியாகத்தான் இருந்தார், அச் சந்தர்ப்பத்தின் விஜயலக்‌ஷ்மியும் ரஞ்சித் பண்டிட்டும் இரண்டாவது தடவையாக ஐரோப்பிய யாத்திரையை மேற்கொண்டனர்.

அப்பொழுது அவர்களுக்கு சந்திரலேகா, நயன்தாரா எனும் இரண்டு பேர் இருந்தனர். அச்சிறு பெண்களை ராணி நேருவின் பாதுகாப்பில் விட்டு விட்டு விஜயலக்‌ஷ்மி கணவருடன் ஐரோப்பா சென்றாள். குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு கிருஷ்ணாவுக்கு ஏற்பட்டது. குழந்தைகளிடம் அவளுக்குப் பிரியம் அதிகம்தான் ஆயினும் அவர்களைக் கண்காணித்து. அவர்களது தேவைகளைக் கவனித்து வளர்ப்பது என்பது சிரமம் மிகுந்த தொல்லையாகத்தான் தோன்றியது கிருஷ்ணாவுக்கு.


அந்த வருஷம் இந்தியாவில் நெடுகிலும் அரசியல் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றன. மக்களிடையே புதிய விழிப்பும் புத்துணர்ச்சியும் ஏற்பட்டிருந்தன. அவர்கள் செயலிலே புதுச்சக்தியும் நெஞ்சுறுதியும் பிரதிபலித்தன. சத்தியாக்கிரக இயக்கம் வெற்றிகரமாக வளர்ந்து வந்தது. வேகமான அபிவிருத்தி காணப்பட்டதில்லை; ஆயினும் ஏதோ மகத்தான நிகழ்ச்சி ஒன்று திடீரென வெடிக்கலாம் என்று அனைவரும் எதிர்பார்த்து வாழ்ந்ததாகக் தோன்றியது. எந்த எதேச்சாதிகார சக்தியாலும் அணைபோட்டுத் தடுத்துவிட இயலாத தன்மையில் மக்களின் சக்தி உருவாகிக் கொண்டிருந்தது. அது ஆங்காங்கே மலர்ச்சியுற்ற