பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

49


 கெல்லாம் முன்னும் பின்னும் பாரா கொடுத்து நகர்ந்தது.

அவ்வளவு ஆர்ப்பாட்டமாக கடந்த மகாசபையின் மேடையிலே மகன் தந்தையை எதிர்த்து நின்றார். 'குடியேற்ற நாட்டு அந்தஸ்து' எனும் கொள்கையை வற்புறுத்துவதற்காக சர்வகட்சி மகாநாடு கூட்டவேண்டும் என்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஜவஹர்லால் எதிர்த்தார். என்றாலும் தீர்மானம் நிறைவேறியது. அதுமட்டுமல்ல, ஜவஹர்லால் நேருவையே காங்கிரசின் பொதுக் காரியதரிசியாகத் தேர்ந்தெடுத்தார்க்ள்.

1929-ம் வருஷம் நேரு குடும்பத்தினருக்கு அதிக உற்சாகமும் பெருமையும் அளித்தது. அவ்வருஷத்திய காங்கிரஸ் லாகூரில் கூடியது. அதற்கு ஜவஹர்லால் நேரு தான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 'இது அரியதொரு நிகழ்ச்சி. காங்கிரஸின் சரித்திரத்திலேயே இதுவரை இத்தகைய நிகழ்ச்சி ஏற்பட்டதில்லை. காங்கிரஸ் போன்ற தேசீய ஸ்தாபனத்தில் தந்தைக்குப் பிறகு மகன் என்ற முறையில் தலைமைப்பொறுப்பை ஏற்பது, உலகத்தில் எங்குமே எப்பொழுதுதாவது ஏற்படக் கூடிய அரிய வாய்ப்பாகத்தான் இருக்க முடியும். அடிக்கடி சகஜமாக நடைபெறக் கூடிய சம்பவம் அல்ல இது' என்று நேரு குடும்பத்தினர் அகமகிழ்ந்தார்கள். நாட்டு மக்கள் இந்த அரிய வாய்ப்பை எண்ணி எண்ணி, எடுத்துப் பேசி, உளம் களித்தார்கள்.

அக் காங்கிரஸ், மிகச் சிறப்பான முறையில் நடந்தது தனது சொத்துக்குத் தனி வாரிசான ஜவஹர்