பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

விஜயலக்ஷ்மி பண்டிட்


அவளுக்கு எதிராக ஸ்ரீமதி வத்ஸவா போட்டியிட்டாள். அம் மாகாணத்தின் அப்போதையைக் கல்வி மந்திரியாக இருந்த ஸ்ரீவத்ஸவா என்பவரின் மனைவி அவள். அரசாங்க பலம். அதிகாரிகளின் ஆதரவு, செல்வ மிகுதி, மந்திரி மனைவி எனும் அந்தஸ்து முதலிய பக்க பலங்கள் துணை நின்றன அவளுக்கு. ஆயினும் விஜயலக்ஷ்மி தான் வெற்றி பெற்றாள். அவளது தியாகம், சேவை, திறமை ஆகியவை அவளுக்கு உதவி புரிந்தன. ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றாள் அவள்.

இந்தியாவில் பெரும்பான்மையான மாகாணங்களில் காங்கிரஸ் மந்திரிசபை அமைக்கப்பட்டது. ஐக்கிய மாகாணத்தில் மந்திரி சபை அமைக்கும் பொறுப்பு கோவிந்த வல்லப பந்துக்கு ஏற்பட்டது. அவர் தமது மந்திரி சபையில் விஜயலக்ஷ்மிக்கும் இடம் அளித்தார். காந்திஜீயின் ஆசியுடன் அவள் மந்திரியானாள்.

விஜயலக்ஷ்மி பண்டிட் 1937 ஜூலை 29-ம் தேதி ஸ்தல ஸ்தாபன மந்திரியாகப் பதவி ஏற்றாள். அதன் மூலம் புதிதாக ஓர் சரித்திரம் ஸ்தாபிக்கப்பட்டது. 'இந்தியாவில் முதன் முதலாக ஒரு பெண் மந்திரியானாள்' என்ற பெருமைதான் அது.

புதிய சட்டசபையில் முதன் முதலாக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வரும் கெளரவமும் அவளுக்கே கிட்டியது.

'புதிய அரசியல் திட்டம் உகந்ததல்ல. அகில இந்தியப் பிரதிநிதிகள் அடங்கிய சபை ஒன்று வகுக்கும் அரசியல் அமைப்புதான் இந்தியாவுக்கு நன்மை பயக்கும்.