பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

73



அத்தகைய சபை ஒன்றைக் கூட்ட வேண்டியது அவசியம்' என்ற தீர்மானத்தை முதன் முதலாகச் சட்ட சபையில் நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரச்ஸ் எண்ணியது.

அதன்படி ஐக்கிய மாகாணச் சட்டசபையில் முதல் மந்திரி பந்த் அத் தீர்மானத்தைக் கொண்டு வருவதாக இருந்தது. எதிர்பாராத வகையில் அவர் நலக் குறைவு அடைந்தார். ஆகையால், அவருக்குப் பதிலாக விஜயலக்ஷ்மியே தீர்மானத்தை சபை முன் சமர்ப்பித்தாள்.

சட்டசபை நிகழ்ச்சிகளுக்கு முற்றிலும் புதியவள் அவள், பலத்த எதிர்ப்பையும் விவாதங்களையும் எழுப்பக் கூடிய பிரச்சனை அது.எனினும் கூச்ச்மோ அச்சமோ இன்றி எழுந்து புன்னகையோடு பேசினாள், தன்னம்பிக்கையோடும், உணர்ச்சிகரமாகவும் பேசினாள்.

அத் தீர்மானத்தில் திருத்தம் புகுத்த விரும்பினர் சிலர். பலத்த விவாதம் எழுந்தது. விஜயலக்ஷ்மி விட்டுக் கொடுக்காமல், பெருமிதமாக, விடை அளித்தாள். 'தந்தைக்கு ஏற்ற மகள். தமையனுக்குச் சரியான தங்கை. நல்ல திறமைசாலி' என்று எல்லோரும் போற்றும் வகையில் அவன் சட்ட சபையில் பிரகாசித்தாள்.

மந்திரி பதவிக்கு அவள் பொருத்தமானவள்: அவளுக்கு அப் பதவி மிகவும் பொருத்தம் என்று நாட்டினர் வியந்தனர். இதைப் பற்றி கிருஷ்ணா எழுதியுள்ளது. குறிப்பிடத் தகுந்தது தான்.