பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

75




அமைந்துள்ளது. அவள் நல்ல தாய்; திறமையான குடும்பத் தலைவி. அரசியல் அவள் வாழ்வின் பெரும் பொழுதைப் பற்றிக் கொண்ட போதிலும்,குடும்பத்தைக் கவனித்துக் குழந்தைகளை போஷிப்பதில் அவள் ஒரு குறைவும் வைத்ததில்லை. அவற்றுக்குத் தேவையான காலமும் அவளுக்கு இருந்தது.

தன்னைச் சுற்றிலும் இனிமையும் நிறைந்திருக்க வேண்டும் என்பது விஜயலக்ஷ்மியின் ஆசை. தனது வீட்டைப் போலவே, தான் கடமை ஆற்றும் அலுவலகமும் மிளிர விருப்பம் அவளுக்கு உண்டு.

அவள் சர்க்கார் காரியாலத்தில் ஓர் அறை பெற்றதும், அதை மனேகரமான சூழ்நிலையாக மாற்றிவிட்டாள். அநாவசியமாக அடைத்துக்கொண்டு கிடந்த மேஜை நாற்காலிகள், மரச் சாமான்களை எல்லாம் அகற்றிவிட உத்திரவிட்டாள். சுவரில் பூசப்பட்டிருந்த பசுமை நிறத்துக்குப் பொருத்தமான வர்ண விரிப்பைத் தரையிலே பரப்பச்செய்தாள். குளுமை நிறத் திரைச் சிலைகளைத் தொங்கவிட்டாள். மேஜை மீது அழகு செய்ய இனிய ரோஜா மலர்களுக்கு ஏற்பாடு பண்ணினாள்.

அவள் கடமைகளைக் கண்ணும் கருத்துமாய் கவனிக்கத் தவறினாளில்லை. கட்டுக்கட்டாகக் குவிந்து கிடந்த கடிதங்களை எல்லாம் பொறுமையுடன் வாசித்து மக்களின் குறைகளை உணர்ந்து, உரிய வகையில் உத்திரவுகளிட்டாள் விஜயலக்ஷ்மி. அவளது அறிவை