பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

85

படுத்தியது. எனினும் அவள் அயர்வுறாது பொழுது போக்கி வந்தான்.

ஆகஸ்டு 30-ம் தேதி மலர்ந்த முகத்துடனும், மலர்மாலைகள் சுமந்த தோள்களோடும், மிடுக்காக சிறை புகுந்த மகள் லேகாவைத் தாய் காண நேர்ந்தது. முதலில் மகள் தன்னைச் சக்திக்க வருவதாக எண்ணினாள் அவள். உண்மை புரிந்ததும், ‘இச்சிறுமிக்கா சிறைவாசம்?’ என்று துடித்தது அவள் உள்ளம். பெருமிதமும் ஏற்பட்டது.

விஜயலக்ஷ்மி சிறையிலிருந்த போது மகாதேவ தேசாய் காலமான செய்தி கிடைத்தது. மிகுந்தவேதனை அடைந்தாள் அவள். அவளது வாழ்வின் பழைய கால நினைவுகள் அவள் எண்ணவெளியிலே நிழலாடின. ரஞ்சித் பற்றிமுதன் முதலில் தெசாய் அறிமுகம் செய்த சந்தர்ப்பமும் அவளுக்கு நினைவு வந்தது. உத்தம் நண்பரின் பிரிவு ரஞ்சித் பண்டிட்டுக்கு ஆற்ற முடியாத் துயரம் அளிக்கும் என்று கலங்கினாள் அவள்.

சில தினங்களிலேயே ரஞ்சித்தும் கைது செய்யப்பட்டார். அவரும் நைனி சிறையில் ஓர் புறம் பாதுகாப்பில் வைக்கப்பட்டார் இருவரும் அபூர்வமாக என்றாவது சந்திக்க அனுமதி கிடைத்து வந்தது. ஒரே கட்டிடத்தினுள் அருகருகே இருந்தும் கூட அவர்களுக்கிடையே வெகுதாரம் பரவிக் கிடந்தது போல்தான் தோன்றியது. பரஸ்பரம் புத்தகங்கள் பரிமாறிக் கொள்ள அவர்கள் சிலசமயம் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கடிதத் தொடர்பு கொள்ள உரிமை இருந்ததில்லை.

6