பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

அவருக்கு அளிக்க ஆசைப்பட்டார்கள். அதுதான் ஆங்கில நாட்டில் வைத்தியர்களுக்குக் கிடைக்கக் கூடிய தலை சிறந்த கெளரவமாகும். ஆனல் ஹார்வி காம் வயது முதிர்ந்து விட்டதாகக் கூறி அந்தக் கெளரவத்தை வேண்டாம் என்று மறுத்து. விட்டார். ஆயினும் அவர் தம் சொந்தச் செலவில் அக்தக் கல்லூரியில் ஒரு புஸ்தக கிலேயமும், விவாத மண்டபமும், பொருட்காட்சி சாலையும் அமைத்து வழங்கினர். அந்தக் கல்லூரியார், அவர் அங்தக் கல்லூரி மாணவர்களுக்குத் தமது சித்தாக் தத்தை முதன் முதலாக எடுத்துக் கூறியபொழுது உபயோகித்த குறிப்புப் புஸ்தகங்களை இன்னும் தங்கள் அரும் பெரும் பொக்கிஷமாக மதித்துப் போற்றிப் பாதுகாத்து வருகிருரர்கள்.

1657-ம் வருஷத்தில் அவருக்கு பக்கவாதம் கண்டது. அதல்ை வாய் பேசமுடியாதபடி ஆய் விட்டது. ஆயினும் அறிவு வெகு தெளிவாகவே இருந்தது. அப்படிப் பேசமுடியா திருந்த சமயத் தில் தம்முடைய தம்பிமார் மக்களை அழைத்து அவர்களுக்குத் தம்முடைய ஜங்கம சொத்துக்களே யெல்லாம் எ டு த் து வழங்கிவிட்டு விண்ணுலகு அடைந்தார்.

அவருக்குக் குழங்தை கிடையாது.மனேவியாரும் அவர் இறப்பதற்குச் சிலவருஷங்களுக்கு முன்பே காலமாய்விட்டார். அதல்ை அவர் தம்முடைய சொத்து முழுவதையும் அரச வைத்தியக் கல்லூரிக்

கே எழுதிவைத்து, ஆண்டுதோறும் அறிஞர் 36