பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லியம் ஹார்வி

ஒருவரைக் கொண்டு சிறந்த பிரசங்கம் ஒன்று கிகழ்விக்கும்படி கல்லூரியாரைக் கேட்டுக் கொண் டார். அவர் எழுதி வைத்துள்ள உயிலில், அந்தக் கல்லூரியார் இயற்கையின் ரகசியங்களைப் பரிசோ தனே மூலம் காண முயலவேண்டும் என்றும், வைத் தியர்கள் பரஸ்பரம் அன்புடன் கடந்து தங்கள் தொழிலின் கெளரவத்தைக் காக்க வேண்டும்’ என்றும் எழுதியிருந்தார். ஹார்வி பிரசங்கம் ” இன்று காறும் வருஷங்தோறும் அங்கக் கல்லூரி யில் நடைபெற்றுக்கொண்டு வருகிறது.

1883-ம் வ ரு ஷ த் தி ல் அங்தக் கல்லூரியார் ஹெம்பன் டெட் ஆலயத்தில் ஹார்வி மண்டபம் ஒன்று கட்டி அதில் அழகான வெள்ளைச் சலவைக் கல் கல்லறை அமைத்து அதில் ஹார்வியின் சவப் பெட்டியைக் கல்லறைத் தோட்டத்திலிருந்து எடுத் துக் கொண்டுபோய் அ வ ரு ைடய நூல்களையும் சேர்த்து அடக்கம் செய்தார்கள்.

ஆல்ை உண்மையிலேயே அவருக்கு என்ன விதமான கெளரவம் யாரால் செய்ய இயலும்? மக்கள் ஆரோக்கியத்துக்கு அவசியமான பேருண் மையைக் கண்டு கூறிய மகான் அவர். அவர் உலகத்துக்குச் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் மாற்றலரிது.

97