பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லூயி பாஸ்டியர்

அவருக்கு அங்க சாஸ்திரத்திலுள்ள அறிவு அதிகக் குறைவானதே என்று ஆசிரியர்கள் கூறினர்கள். ஆமாம், அவரும் அந்தப் பரீட்சையில் பதிலைாவ தாகத் தான் தேறியிருந்தார். அதனால் அவர் மறுபடியும் ஒருவருஷம் அ .ே த பரீட்சைக்குப் படிக்க விரும்பினர். அவருடைய தோழர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவருடைய பெற்றாேரர்கள் வேண்டாம் என்று கூறினர்கள். ஆனல் அவர் தங்தையிடம் பலமுறை வேண்டிக்கொண்டு பாரி ஸ்-க்குப் போய்ப் படிக்க அனுமதி பெற்றார்,

அங்கே முன்போலவே பார்பெட்டோடுதான் தங்கியிருந்தார். ஆல்ை இப்பொழுது அக்கரை யுள்ள வாலிபராக ஆய்விட்டபடியால், அடுத்த வருஷத் துப் பரீட்சையில் நான்காவதாகத் தேறி அந்த நகரத்துப் பெரிய கார்மல் கலாசாலையில் சேர்ந்த படிக்கலானர். அப்பொழுது படிப்பில் அதிகக் கண்ணும் கருத்துமாயிருந்தார். அவர் மாலைவேளைகளில் சிறிதுநேரம் உலாவச் செல்வ தைத் தவிர, மற்ற நேரமெல்லாம் ஆராய்ச்சி சாலை யிலேயே வேலைசெய்து வந்தார். அதனுல் அவ ருடைய தோழர்கள் அவரை ‘ஆராய்ச்சி சாலைத் அாண்’ என்று கேலி செய்தார்கள். அவருடைய பெற்றாேரர்கள் தம்முடைய குமாரனுக்கு ஆரோக் கியம் குன்றிவிடுமே என்று அஞ்சினர்கள்.

இவ்விதம் படிப்பிலேயே காலத்தைச் செல விட்டாலும், இதுவரைத் தமக்கு உதவிசெய்த பார் பெட்டுக்கு நன்றிசெலுத்த விரும்பித், தம்முடைய 105