பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரிய்ார்கள்

ஆயினும் கன்றாகக் கவனித்தபொழுது, அவை எல் லாம் வலதுபக்கப் பட்டையோ இடதுபக்கப் பட் டையோ உடையவைகளாக இல்லாமல், அவற்றில் சில வலது பட்டை யுடையனவாகவும் சில இடது பட்டை யுடையனவாகவும் இருந்ததைக் கண்டார். அதல்ை வலதுபட்டைக் கிரிஸ்டல்களையும் இடதுபட் டைக் கிரிஸ்டல்களையும் வேறுவேருகப் பொறுக்கி எடுத்து, அவைகளைச் சமமாகச் சேர்த்து ஒளியை அனுப்பிப் பார்த்தார். அப்பொழுது ஒளி நேரா கவே சென்றது. அதைக் கண்டதும் அவர் ‘ஆஹாl அதுதான் விஷயம், அறிந்துவிட்டேன் ‘ என்று கூறிக்கொண்டு அறைக்கு வெளியே ஒடினராம், அங்குவந்த ஆசிரியர் ஒருவரைக்கட்டி ஆலிங்கனம் செய்தாராம் ஆராய்ச்சியில் ஆரம்பவெற்றி கண்ட தில் அவ்வளவு ஆனந்தம்!

ஐரோப்பாவிலுள்ள சர்வகலா சாலை க ளி ல் பாரிஸிலுள்ள பொர்போர்ன் சர்வகலாசாலேதான் மிகப் பழமையானதாகும். அது பல துறைகளிலும் அதிகக் கீர்த்திபெற்றதுமாகும். அ ங் கே ரஸா யனப் பேராசிரியராக இருந்த மான்ஷர் பயட் என்பவர்க்கு அப்பொழுது வயது எழுபத்து நாலு. அவர் அநேக ஆண்டுகளாக இந்தக் கிரிஸ்டல் விஷயம்பற்றி அதிகமான ஆராய்ச்சிகள் செய் திருந்தார். அவருடைய காதுக்குப் பாஸ்ட்டியர் கண்டுபிடித்த விஷயம் எட்டியபொழுது, அதை அவரால் நம்ப முடியவில்லை. அவர் சந்தேகிக்கிருரர் என்று அறிக் த தும், அவரைப்பார்க்க விரும்புவதா கப் பாஸ்டட்டியர் அவருக்குக் கடிதம் எழுதினர். 108