பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லூயி பாஸ்டியர்

பால் புளித்து விடுகிறது, சாராயம் புளித்து விடுகிறது என்றால் அதற்குக் காரணம் அவற்றில் காணப்படும் சில நுண்ணிய உயிர்களே யாகும். அந்த உயிர்கள் அந்தப் பாலிலோ சாராயத்திலோ உண்டாவதில்லை. அவற்றைச் சூழ்ந்து கிற்கும் காற்றிலிருந்துதான் வந்து சேர்கின்றன. எந்தக் காற்றிலும் இமய மலை மேலுள்ள சுத்தமான காற்றிலுங் கூடத் துளசி காணப்படுகிறது. அக்தத் துளசியில் அநேக நுண்ணுயிர்கள் எப்பொழுதும் சவாரி செய்து கொண்டிருக்கின்றன. ஆதலால் காற்றைச் சுத்தமாக வைத்துக் கொண்டாலும் சரி, அல்லது ஆகார வஸ்துக்க*ளக் காற்றுப்படாமல் வைத்துக் கொண்டாலும் சரி, அவைகள் புளித்துக் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும் என்று

சொன்னர்.

1864-ம் வருஷம் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி அன்று ஸார்போர்ன் சர்வகலாசாலையில் பாஸ்ட் டியருடைய பிரசங்கத்தைக் கேட்க பாரிஸ் நகரத்தி லுள்ள அறிஞர்கள் எல்லோரும் குழுமியிருந்தார் கள். அப்பொழுது அவர் மெதுவாக வன் து மேடைமீது ஏறி கின்று எவ்விதத்தடபுடலுமின்றிச் சாவதானமாகத் தாம் அரிதில் கண்டுபிடித்த உண்மையை எடுத்துக் கூறி, இரண்டு பாட்டில் ரஸாயன மருந்துகளைக் கொண்டு கிரூபித்துக்

காட்டினர்.

அன்று முதல் அது விஷயமாக அவர்க்கு அநேக எதிர்ப்புக்கள், தோன்றின. அவைகளில் முக்கியமானது சமயாச்சார்யர்களுடையதாகும்.

115