பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளு ஞானப் பெரியார்கள்

அழிந்து விடும் நிலைமைக்கு வந்த விட்டது. அதைப் பாஸ்ட்டியருடைய பழய ஆசிரியர் டுமாஸ் கண்டு, அவரைப் பட்டுத் தொழிலுக்குப் பேர் போன ஆலாய் நகர்க்குச் சென்று அக்க நோயை ஒழிப்பதற்கான வழியைக் கண்டு சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். அப்படியே பாeட்டியரும் ஆலாய்க்குச் சென்று ஆராய்ச்சி செய்ய ஆரம்பித் தார். ஆல்ை அங்குள்ள பட்டுத் தொழிற்காரர் கள் ‘இதென்ன, வெறும் ரவலாயன சாஸ்திரி ஒருவரை அனுப்பியிருக்கிருரர்கள். இவருக்குப் பட்டுப் பூச்சி விஷயம் என்ன தெரியும்?’ என்று எண்ணினர்கள்.

ஆமாம், அவருக்கு அது விஷயம் ஒன்றும் தெரியாது தான். அவர் அதுவரை பட்டுப் பூச்சி யைப் பார்த்தது கூடக் கிடையாது. அதல்ை பூச்சி நூற் புலவர் ஹென்ரி பேபரிடம் போய் பட்டுக் கூட்டைக் காட்டுமாறு கேட்டார். அவர் கொடுத்த கூட்டில் ஏதோ இாைவதுபோல் கேட்டது. அது என்ன என்.று பாஸ்ட்டியர் கேட்டார். அதற்கு பேபர் ‘அதுவா? அது தான் பட்டுப் புழு, அந்தப் புழுதான் தன்னுடைய பாதுகாவலுக்காக அங் தக கூட்டை உண்டுபண்ணியிருக்கிறது’ என்று கூறினர். ‘ஆஹா! அப்படியா?” என்று கூறி, பாஸ்ட்டியர் அது விஷயமாக ஆராய ஆரம்பித்தார்.

அந்தச் சமயத்தில் அவருக்குத் தம்முடைய தங்தையையும் கடைக்குட்டிக் குழந்தையையும் இழக்கும்படியான துர் அதிர்ஷ்டம் உண்டா 118